திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாயாண்டி குடும்பத்தாரை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அண்ணன் தம்பி பாசமுன்னா இப்படித்தான் இருக்கணும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பேராதரவு பெற்று வருகிறது. இப்போது கதிர் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது ஒரு போட்டிக்காக முல்லை மற்றும் கதிர் இருவரும் மதுரைக்கு வந்துள்ளனர்.

அங்கு இந்த ஜோடிக்கு டஃப் கொடுக்கும் மற்றொரு ஜோடி கதிர், முல்லை மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். அடிக்கடி இவர்கள் இடையே ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கதிரை தீர்த்து கட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Also Read : ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்த போட்டியாளர்.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் ஆஸ்கர் நாயகி

இதனால் நிறைய அடி ஆட்கள் கதிரிடம் சண்டை இடுகின்றனர். அப்போது செய்வதறியாமல் முல்லை போன் செய்து ஜீவாவிடம் இங்கு நடக்கும் பிரச்சனைகளை கூறுகிறார். உடனே ஜீவா வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் விஷயத்தை கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி கதிரிடம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.

அப்போது சண்டையிடும் போது கதிரை பின்னாலிருந்த ஒருவர் கத்தியால் குத்த வருகிறார். அந்த நேரத்தில் கரெக்டாக மூர்த்தி எண்ட்ரி கொடுத்து கதிரை காப்பாற்றுகிறார். மாயாண்டி குடும்பத்தார் அண்ணன், தம்பிக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் பாசம் உள்ளது.

Also Read : பாத்ரூமில் குயின்ஸி காலில் விழுந்த ஜனனி.. தெரியாம செஞ்சதை பில்டப்பாக்கிய பிக்பாஸ்

மேலும் இந்த சண்டையில் ஒரு வழியாக மூர்த்தி கதிரை காப்பாற்றி விடுகிறார். அப்போதுதான் மூர்த்திக்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது. அதாவது கதிர் இந்த போட்டியின் மூலம் பணத்தை வென்று சீக்கிரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவதற்காக தான் இவ்வாறு செய்துள்ளார்.

ஆகையால் மீண்டும் கதிர், முல்லை இருவருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வீட்டுக்கு வர உள்ளனர். ஆனால் ஹோட்டல் இப்போது நன்றாக போய்க் கொண்டிருப்பதால் கதிர் தொடர்ந்து இதே தொழிலை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுவாரஸ்யமான கதைகளத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் செல்ல இருக்கிறது.

Also Read : கோபியை விச பாம்பாக கொத்தும் காதலி.. மீட்டிங்கில் முட்டிக் கொள்ளும் சக்காளத்திகள்

Trending News