வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் நேரடியாக மோதுகிறது. இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
எனவே துணிவு படத்தின் பப்ளிசிட்டிக்காக உதயநிதி செய்த தில்லுமுல்லு வேலை வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. அதாவது துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித் வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.
Also Read: எங்க வயித்துல அடிக்கிறீங்களே.. உதயநிதி வைத்த ஆப்பால் தொலைந்து போன நிம்மதி
இந்த புரளியை கிளப்பி விட்டது உதயநிதி ஸ்டாலின் தான். ஏனென்றால் அவர் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வருவார் என சொன்னால் துணிவு படத்தின் வெற்றி வேறு லெவலுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். பொதுவாக அஜித் யாருடைய பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் பொது நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ள மாட்டார்.
அதுமட்டுமின்றி அவர் நடிக்கும் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்க மாட்டார். இது எல்லாம் தெரிந்தும் உதயநிதி ஸ்டாலின் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கிறார்.
Also Read: 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடலாமா? மீண்டும் அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்
இந்த செய்தி தல அஜித்தின் காதுக்கு எட்டியவுடன் ‘நல்ல படத்திற்கு ப்ரமோஷன் அவசியம் இல்லை’ என்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அஜித் கருத்து பதிவிட்டு இருந்தார். இதை வைத்துப் பார்த்தால் அஜித்தின் அனுமதி இல்லாமலே உதயநிதி ஸ்டாலின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதை தெரிகிறது.
மேலும் தல அஜித் துணிவு படக் குழுவிடம், ‘இனி இது போன்ற பப்ளிசிட்டி மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு என்னுடைய பெயரை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது’ என்று தயாரிப்பாளரிடம் உச்சகட்ட கோபத்தை கராராக காட்டியிருக்கிறார்.
Also Read: கமலுடன் கூட்டணி சேர்ந்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. கைமாறிய பல கோடி பணம்