பொதுவாக நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்தித்துள்ளதாக பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் தனது சொந்த குடும்பமே பணத்துக்காக தன்னைத் பயன்படுத்திக் கொண்டார்கள் என பகிரங்க குற்றச்சாட்டை ஒரு நடிகை வைத்துள்ளார்.
அதாவது ஒரு பெண் பருவம் அடைந்த உடன் கிட்டதட்ட 15 வயதிலேயே அவரது தாய் சினிமாவில் சேர்த்து விட்டுள்ளார். அப்போது அதிகம் பணம் தருவதாக சொன்னதால் கவர்ச்சி படங்களையே அவர் தாய் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். இதனால் பெரும்பாலும் அந்த நடிகை கவர்ச்சி படங்களில் தான் நடித்துள்ளார்.
ஆகையால் தொடர்ந்து இதுபோன்ற பட வாய்ப்பு அந்த நடிகைக்கு வந்துள்ளது. ஒரு ஏடிஎம் மிஷின் போல என்னை வைத்து எனது அம்மா நிறைய பணம் சம்பாதித்து விட்டார்கள் என்று கவர்ச்சி நடிகை குற்றச்சாட்டு வைத்திருந்தார். படிக்கும் வயதிலேயே என்னை பள்ளியிலிருந்து வெளியேற்றி சினிமாவில் சேர்த்தார்கள்.
மேலும் ஒரு நிலைக்கு வந்த சுயமாக சிந்திக்கத் தெரிந்த பின்பு இது போன்ற பட வாய்ப்பை அந்த நடிகை மறுத்துள்ளார். மேலும் இசைத்துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை தற்போது மிகவும் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
தனது கணவன் வந்த பிறகு தான் எது சரி, எது தவறு என புரிந்து கொண்டு ஒரு துணிச்சலான முடிவெடுத்ததாக நடிகை கூறியுள்ளார். தற்போதும் படங்களில் நடித்து வரும் நடிகை நல்ல கௌரவமான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார்.
Also Read :அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி