சமீபகாலமாக பல இளைஞர்கள் யூடியூப் சேனல் துவங்கி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்த பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளனர்.
இதில் விக்னேஷ் காந்த் ஹிப் ஹாப் ஆதியின் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் தற்போது பிளாக் ஷீப் யூடியூப் சேனலுக்கு போட்டியாக ரசிகர்களின் பேதாரவு பெற்ற சேனல் மைக் செட். இந்த சேனலில் நகைச்சுவை வீடியோக்கள் போட்டு பிரபலமானவர் ஸ்ரீராம்.
இணையத்தில் இவரது ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது. தற்போது இவரும் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். ஜிவி பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள 13 படத்தை இயக்கிய விவேக் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் மைக் செட் ஸ்ரீராமுக்கு ஜோடியாக மானசா கிருஷ்ணன் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் ஸ்ரீராம் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதேபோல் ஷார்ட் பிலிம் மூலம் மக்களுக்கு பரிச்சயமான பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் அடி எடுத்து வைத்தார். தற்போது லவ் டுடே படத்தை இயக்கி நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் இப்படத்தின் விமர்சனத்தால் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் அலைமோதுகிறது. இந்நிலையில் பிரதீப்புக்கு போட்டியாக மைக் செட் ஸ்ரீராம் வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் இப்படத்தைப் பற்றிய அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.