புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 இந்திய நடிகைகள்.. நயன்தாராவை ஓரங்கட்டிய ராஷ்மிகா!

நாம் அனைவரும் பயன்படுத்தும் கூகுளில் நமக்கு தேவையானவற்றை தேடி அதனை அறிந்து கொள்வோம். இதனிடையே சினிமா துறையில் நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் அவர்கள் நடிக்கும் படங்கள், அவர்களின் சர்ச்சைகள் என இணையத்தில் கசிந்து அவர்களின் பெயர்களை கூகுள் சர்ச் பாக்ஸில் தேடி ரசிகர்கள் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வர்.  அந்த வகையில் இந்திய சினிமாவில் உள்ள ஒட்டு மொத்த நடிகைகளின் டாப் 10 கூகுளில் தேடப்பட்ட நடிகைகள் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

ராஷ்மிகா மந்தனா : இந்த வருடம் ராஷ்மிகா மந்தனா பெயர் சொல்லும் அளவிற்கு திரைப்படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. தமிழில் தற்போது நடிகர் விஜயின் நடிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அண்மையில் வெளியான சீதாராமன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்திருப்பார். இதனிடையே கூகுளில் ரஞ்சிதமே ராஷ்மிகா என அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளார்

Also Read : நயன்தாரா போல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. மேடையில் அதிரடியாக பேசிய நடிகை

சமந்தா : நடிகை சமந்தா தனது விவாகரத்திற்கு பின்பு தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் நயன்தாராவை ஓரங்கட்டி சமந்தாவை தூக்கிவைத்து ரசிகர்கள் கொண்டாடினர்.இவரது நடிப்பில் யசோதா திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில், அன்மையில் சமந்தா மயோட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சமந்தா கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

காஜல் அகர்வால் : துல்கர் சல்மான் நடிப்பில் சினாமிகா திரைப்படம் வெளியான நிலையில் காஜல் அகர்வால் இரண்டாம் கதாநாயகியாக நடித்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வாலுக்கு நீல் என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், அவரது பிரசவ காலத்தில் அவர் சந்தித்த சில கசப்பான நிகழ்வுகளையும் தனது இரண்டு குழந்தைகள் வயிற்றிலேயே உயிரிழந்த சம்பவம் பற்றியும் காஜல்அகர்வால் சமூக வலைத்தளங்களில் உருக்கமாக பேசினார். இதுவே காஜல் அகர்வாலின் பெயரை அதிகமாக கூகுளில் தேட வைத்தது எனலாம். மேலும் அதிகம் கூகுளில் தேடப்பட்ட இந்திய நடிகைகளில் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா : நடிகை பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் இந்த வருடம் ரிலீசாகாத நிலையில் அமெரிக்க பாடகரான நிக் ஜோனசை திருமணம் செய்ததற்கு பின் பிரியங்கா சோப்ரா உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளார். இந்த வருடம் பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் என்ற பட்டியலில் 3 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Also Read : 12 வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி.. சிம்புவுக்கு ஜோடியாகும் இளவரசி

ஆலியா பட் : 2022 ஆம் ஆண்டு எந்த நடிகைக்கு லக்கி ஆக இருந்ததோ, இல்லையோ, ஆலியா பட்டிற்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. இவர் இந்த வருடத்தில் நடித்த ஷம்ஷெரா, பிரம்மாஸ்திரம், கங்குபாய் காட்யாவாடி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஹிட்டடித்துள்ளன. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட ஆலியா பாட்டிற்கு இந்த வருடம் நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகைகளில் அலியாபட் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

கத்ரீனா கைப் : நடிகை கத்ரீனா கைஃப் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவரது திருமணம் பற்றிய செய்தியே இந்த வருடம் பாதி மாதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இவரது நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் தற்போது வரை ரிலீசாகாமல் உள்ள போதும், கத்ரீனா கைஃப் அதிகம் கூகுளில் தேடப்பட்ட நடிகைகளில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

2022-ல் தேடப்பட்ட 10 நடிகைகளில் 6 பேர் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் 8வது இடத்தில் தீபிகா படுகோனே 9வது இடத்தில் நயன்தாரா மற்றும் 10வது இடத்தில் தமன்னா இடம்பிடித்துள்ளனர் இதில் நயன்தாரா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Also Read : எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது, அடுத்தடுத்து 3 மரணங்கள்.. பட வாய்ப்பிற்காக டாப் நடிகை கடந்து வந்த

Trending News