ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அதே நாளில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பதால் கோலிவுட்டின் மொத்த எதிர்பார்ப்பும் இந்த படங்களின் மீது தான் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்திலிருந்து அஜித்தின் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் முகத்தில் ஆக்ரோஷத்துடன் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் அஜித் முதுகில் நீளமான ஒரு துப்பாக்கியை மாட்டிக் கொண்டு கண்ணில் கண்ணாடி, மாஸ்க் என்று வெறித்தனமாக இருக்கிறார்.
Also Read: அது நடந்தா துணிவு படம் ரிலீஸுக்கு முன்னரே 450 கோடி வசூலாகும்.. வாய்ப்பை உதாசீனப்படுத்தும் அஜித்
ஏற்கனவே வெளியான ஒரு போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக சேரில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து இருந்தார். அதுவே பார்ப்பதற்கு படு மிரட்டலாக இருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் போட்டோவிலும் அவர் துப்பாக்கி சகிதமாக இருப்பது படத்தில் எப்படிப்பட்ட ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள இந்த போட்டோ இணையதளத்தையே அதிர வைத்துள்ளது. இதன்மூலம் துணிவு படத்தின் ப்ரோமோஷனும் அட்டகாசமாக ஆரம்பித்துவிட்டது. தற்போது இந்த போட்டோவை அதிக அளவு ஷேர் செய்து வரும் ரசிகர்கள் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.
Also Read: குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அஜித்.. வெளிநாடுகளில் வியாபாரம் ஆகாத துணிவு, காரணம் இதுதானாம்
சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான சில்லா சில்லா அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் இப்பாடலை பாடியிருக்கிறார்.
அஜித்தின் அறிமுக பாடலாக இருக்கும் இந்த சில்லா சில்லா சாங் நிச்சயம் ட்ரெண்டாகும் என்று ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர். அந்த வகையில் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் இப்போதே களைக்கட்ட தொடங்கியுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.