புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜவ்வுமுட்டாய்க்கே டஃப் கொடுத்த பாரதி கண்ணம்மா.. கதை இல்லேன்னா இப்படியா உருட்டுவீங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது கிளைமாக்ஸ்சை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது கூட கதையில் சுறுசுறுப்பு இல்லாமல் ஜவ்வாக இழுத்து வருகிறார் இயக்குனர். அதுவும் ஜவ்வுமிட்டாய்க்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பாரதி கண்ணம்மா தொடர் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என தெரிந்து கொண்ட ஹேமா அவரது வீட்டிற்கு சென்று விடுகிறார். மேலும் தனது மகளின் பிரிவை தாங்க முடியாமல் பாரதி ஹேமாவின் ஸ்கூலுக்கு செல்கிறார். ஆனால் அவரின் முகத்தை பார்க்க ஹேமா மறுத்து விடுகிறார்.

Also Read : பாத்ரூமில் கதறி அழுத தனலட்சுமி.. வச்சி செஞ்சு விட்டா ஆண்டவர்

வேறு எப்படி கதையை கொண்டு போவது என்று தெரியாமல் முடிந்த தீபாவளியை மீண்டும் கொண்டாடுவது போல் உருட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர். அதாவது தீபாவளி பண்டிகையை கொண்டாட சௌந்தர்யா குடும்பம் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார்கள்.

அங்கு ஹேமா, லட்சுமி என அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுகிறார்கள். ஆனால் தாயின் மனம் பித்து என்பது போல சௌந்தர்யா தனது மகன் தனியாக இருப்பதை நினைத்து கண்ணம்மாவிடம் வருந்துகிறார். அதனால் ஹேமாவை அழைத்த உன்னை வளர்த்த அப்பாவை மறக்கக்கூடாது என பாரதியை பார்க்க அனுப்பி வைக்கிறார்.

Also Read : டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

பாரதிக்காக ஹேமா ஒரு இனிப்பு செய்து கொண்ட வீட்டுக்கு செல்கிறார். ஹேமாவை பார்த்தவுடன் பாரதி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். அகில், பாரதி, ஹேமா மூவரும் சிறப்பாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். இன்னும் சில நாட்களில் பாரதியின் டி என் ஏ டெஸ்ட் ரிசல்ட் வர உள்ளது.

இதில் திரும்பவும் வெண்பா சூழ்ச்சி செய்தார் என்று காண்பிக்கபட்டால் ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு எல்லையை இருக்காது. அந்த அளவுக்கு ஒன்னும் இல்லாத கதையை ஒரு வருடமாக உருட்டி உருட்டி வருகிறார். ஆகையால் சீக்கிரம் எண்ட் கார்டு போட்டு பாரதி கண்ணம்மா தொடரை முடிக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Also Read : அப்பாவுக்கு மகள் தப்பாம பிறந்திருக்கு.. திருட்டுத்தனத்தில் கோபியை உரித்து வைத்திருக்கும் இனியா

Trending News