உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் சந்தித்து வரும் சில கொடூரமான விஷயங்களும் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நடிகைக்கு நடந்த ஒரு கொடுமையை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தன் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு காட்டி இருக்கிறார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வித்தியாசமான முயற்சியாக வெளிவந்த திரைப்படம் தான் இரவின் நிழல். இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் கணவன் வட்டி கட்டாததால் மனைவியை கடத்தி சென்று ஆடை இல்லாமல் அடைத்து வைப்பது போன்று ஒரு காட்சி இருக்கும். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் பிரபல நடிகைக்கு நடந்திருக்கிறது.
Also read: அம்மாவுக்கு தெரியாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. படுக்கைக்கு ஜோசியரை பார்த்து நாள் குறித்த கேவலம்
தற்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக புகழ்பெற்றிருக்கும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அந்த நடிகை. தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு ரவுண்டு வந்த அவர் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் சொந்தமாக படம் ஒன்றை தயாரித்து, நடித்திருந்தார். அதற்காக அவர் பிரபல பைனான்சியர் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்றிருக்கிறார்.
ஆனால் நடிகை எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் ஓடவில்லை. இதனால் பெரும் நஷ்டம் அடைந்த அந்த நடிகை வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறார். கொடுத்த காசுக்கு வட்டி வராததால் அந்த பைனான்சியர் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் நடிகையை கடத்தி சென்று ஒரு ரூமில் ஆடை இல்லாமல் அடைத்து வைத்திருக்கிறார்.
வாங்கிய கடன் தொகை வரவில்லை என்றால் சில பணக்கார பெரும் புள்ளிகளின் ஆசைக்கு நடிகை இணங்க வேண்டும் என்ற மிரட்டலயும் அவர் விடுத்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன நடிகை கடனை எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனாலும் மனம் இறங்காத அந்த பைனான்சியர் நடிகையை ரூமிலேயே அடைத்து வைத்திருக்கிறார்.
பிறகு எப்படியோ நடிகையின் தரப்பிலிருந்து கடன் தொகை முழுவதுமாக வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தான் நடிகை தன்னுடைய வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு அந்த நடிகை சிறிது நாட்கள் சினிமாவில் கவனம் செலுத்துவதையே விட்டுவிட்டார். அதன் பிறகு ஒருவரை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை தற்போது தன் குடும்பத்தை கவனித்துக் கொண்டு நடிப்பிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். நடிகைக்கு நடந்த இந்த கொடுமை திரையுலகில் தெரிந்தும் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனதுதான் பரிதாபம்.
Also read: படக் காட்சிக்காக தாலி கட்டிய நடிகர்.. அதீத காதலால் கழட்ட மறுத்த நடிகை