வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

2022 ஆம் ஆண்டின் சிறந்த 5 வில்லன்கள்.. கடைசியா 5 நிமிடம் வந்தாலும் முதல் இடத்தைப் பிடித்த ரோலக்ஸ்

2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கலவையான திரைப்படங்கள் தான் வெளியானது. ஆண்டின் முதல் முன்னணி நாயகரின் திரைப்படமாக, நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் படு மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே அடுத்தடுத்து வந்த விக்ரம், டான், பொன்னியின் செல்வன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைபோடு போட்டது எனலாம். இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் சூப்பர் டூப்பர் வில்லன் என்று பெயரெடுத்த ஐந்து வில்லன்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சுனில்: 2021 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் சுனில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்து வந்த சுனில், புஷ்பா திரைப்படத்தில் மங்கலம் சீனு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார். தொடர்ந்து தமிழில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள ஜோக்கர் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக சுனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற ஐந்தாவது இடத்தை நடிகர் சுனில் பிடித்துள்ளார்.

Also Read : கமலுக்கு மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி.. மாஸ் அப்டேட் கொடுத்த டாப் இயக்குனர்

பிரகாஷ்ராஜ் : நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் கார்த்திக்கு தந்தையாகவும் அத்திரைப்படத்தில் முக்கிய வில்லனாகவும் நடித்திருப்பார். மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் தந்தை கதாபாத்திரத்திலும், கே.ஜி.எப் 2 திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்த பிரகாஷ்ராஜ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில், இந்த வருடம் கமலஹாசன் தயாரித்து, நடித்த விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் என்ற முக்கிய வில்லனாக நடித்து கலக்கினார். இதனிடையே 2022 ஆம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற மூன்றாவது இடத்தை விஜய் சேதுபதி பிடித்துள்ளார்.

Also Read : சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி.. வேற லெவல் காம்போவில் உருவாகும் படம்

சஞ்சய் தத் : 2022 ஆம் ஆண்டின் முக்கிய திரைப்படமாக கன்னட நடிகர் யஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரிலீசாகி 200 கோடிக்கு மேல் இந்தியாவில் மட்டுமே வசூலித்த நிலையில், அதிரா என்ற பயங்கர வில்லனாக இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து அசத்தியிருப்பார். இவரது தோற்றமும் இவரது நடிப்பும் வித்தியாசமாக அமைந்ததையடுத்து 2022 ஆம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

சூர்யா : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற முக்கிய வில்லனாக சூர்யா நடித்து அசத்தியிருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் 5 நிமிடங்களில் மட்டுமே தோன்றும் சூர்யா, இதுவரை ரொமான்டிக் நாயகனாகவே பார்த்த ரசிகர்களுக்கு சூர்யாவின் வில்லத்தனம் ஆணித்தரமாக மனதில் பதிந்துள்ளது. ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக இன்னும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், 2022 ஆம் ஆண்டின் சிறந்த வில்லன் என்ற முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Also Read : சூர்யாவுடன் இருக்கும் பிரச்சனையை பொது இடத்தில் உறுதிசெய்த பாலா.. வணங்கான் பட நிலைமை இதுதான்!

- Advertisement -spot_img

Trending News