விக்ரம் பாக்கலன்னா தளபதி 67 கதை புரியாது.. அடுத்த குண்டை உருட்டிய கைதி ஆக்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை நடத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி எடுத்த ஆண்டவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவை கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் அவருடைய இந்த விஸ்வரூபம் முன்னணி நடிகர்களுக்கும் சற்று பயத்தை கொடுத்தது.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் உலக அளவில் கவனம் பெற்ற இயக்குனராக மாறி இருக்கிறார். இதனாலேயே அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதை அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் இந்த வருட இறுதியில் ஆரம்பமாக இருக்கிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய ரகசியத்தை நடிகர் நரேன் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார். கைதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் அதன் தொடர்ச்சியாக விக்ரம் திரைப்படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது அவரிடம் தளபதி 67 குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விக்ரம் திரைப்படத்தை பார்த்திருந்தால் மட்டுமே தளபதி 67 படத்தின் கதை புரியும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் விக்ரம் திரைப்படத்தின் தொடர்ச்சி தான் இந்த தளபதி 67 என்று தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் பட கதை இருந்தது அனைவருக்கும் தெரியும். தற்போது அடுத்த படத்தையும் லோகேஷ் முந்தைய படங்களுடன் கனெக்ட் செய்து உருவாக்க இருக்கிறார். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. அந்த வகையில் தளபதி 67 ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே பயங்கரமாக ப்ரமோஷன் செய்யப்பட்டு வருவது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.