வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கவர்ச்சி நடனத்தில் சிலுக்குக்கு போட்டியாக வந்த நடன சூறாவளி.. எந்த சர்ச்சையிலும் சிக்காததுக்கு இதுதான் காரணமாம்

80 கால கட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நிகராக புகழ்பெற்றிருந்த ஒரே கவர்ச்சி நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதாவாக மட்டும்தான் இருக்க முடியும். அவருடைய பெயரை சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது. இன்றும் கூட அவருடைய இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய குறையாக தான் இருக்கிறது.

அந்த வகையில் அவருக்கு நிகராக புகழ்பெற்றிருந்த நடிகையாக இருந்தவர்தான் டிஸ்கோ சாந்தி. சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் இவர் சில்க் ஸ்மிதாவுக்கு போட்டியாக பார்க்கப்பட்டவர் தான். அந்த அளவுக்கு இவருடைய நடனத் திறமை பலரையும் வியக்க வைத்தது. முன்னணி நடிகர்களையே மிஞ்சும் அளவுக்கு இருந்த இவருடைய ஆட்டம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

Also read: பிரபல இயக்குனரை உருக உருக காதலித்த சில்க் ஸ்மிதா.. பல வருடம் வெளிவராத காதல் ரகசியம்

அப்படி ஒரு நடன சூறாவளியாக இருந்த இவர் திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தாலும் நிஜ வாழ்வில் ஒரு கௌரவமான வாழ்க்கையை தான் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வளவு ஏன் இவரை பற்றி ஒரு கிசுகிசு கூட சினிமாவில் இதுவரை வந்ததே கிடையாது. அந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்காத ஒரே நடிகையாகவும் இவர் இருந்தார்.

இதற்கு ஒரே காரணம் அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தது தான். படப்பிடிப்பு தளத்தில் கூட இவர் யாரிடமும் சிரித்து பேச மாட்டாராம். தன்னுடைய காட்சிகள் முடிந்து விட்டால் உடனே கிளம்பி சென்று விடுவாராம். இது பற்றி அவரிடம் கேட்டபோது நான் என் வேலையை மட்டும் தான் பார்ப்பேன்.

Also read: சில்க் சுமிதாவை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கிய மருத்துவர்.. தற்கொலைக்கு தூண்டிய கள்ளக்காதல்

அனாவசியமாக வேறு யாரிடமும் சிரித்து பேசினால் அதுவே என் மீது தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பும். அதனால் நான் யாரிடமும் பேசாமல் என் வேலையை முடித்துவிட்டு கிளம்பி விடுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் நான் என் வேலை சம்பந்தமாக இயக்குனர், கேமரா மேன், டான்ஸ் மாஸ்டர் ஆகியவர்களிடம் மட்டும்தான் பேசுவேன். அதை தாண்டி வேறு யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அவர் எந்த ஒரு சிக்கலிலும் சிக்காமல் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளரால் இவருடைய சம்பளத்தை கொடுக்க முடியாமல் போனால் கூட பரவாயில்லை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விடுவாராம். அந்த அளவுக்கு அடுத்தவருடைய பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் நல்ல மனம் கொண்டவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதனாலேயே இவருக்கு ஒரு நல்ல வாழ்வும் அமைந்தது. தற்போது கணவர் இறந்துவிட்டாலும் அவர் நினைவில் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: சத்யராஜுடன் நடிக்க மறுத்த சில்க்.. டென்ஷன்சனில் பற்றி ஏறிந்த ஷூட்டிங் ஸ்பாட்

Trending News