வாரிசு படத்தில் விஜய் கமிட்டானதும் போதும் ஏகப்பட்ட சிக்கலில் தவித்து வருகிறார். படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அதன் பின்பு ஒவ்வொரு பிரச்சனையாக வந்து எல்லாவற்றையும் சமாளித்துவிட்டார்.
ஆனால் வாரிசு ரிலீஸ் செய்வதிலேயே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அதாவது தெலுங்கு தயாரிப்பு சங்கம் ஒரு காலத்தில் முடிவு எடுத்துள்ளனர். அதாவது பண்டிகை காலங்களில் அங்குள்ள நடிகர்களின் படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்ற மொழி படங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் வைத்துள்ளனர்.
Also Read : வாரிசு படத்தில் இணையும் சிம்பு.. சீக்ரெட்டாக நடக்கும் வேலை
இப்போது விஜய்யின் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இது தமிழில் உருவானதால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வாரிசு படத்திற்கு குறைந்த திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ளது.
இதற்கெல்லாம் ஒரு வகையில் காரணம் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தான். இவர் தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் மற்ற மொழி படங்களை வெளியிட்டால் இங்கு உள்ள தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தில் ராஜு தெலுங்கு படங்கள் மட்டுமே பண்டிகை காலங்களில் வெளியிடப்பட வேண்டும் என அறிவித்தார்.
Also Read : புதிய கீதை முதல் வாரிசு வரை.. தளபதி விஜய்யை பதம்பார்த்த 10 சம்பவங்கள்
இதனால் அவர் வச்ச ஆப்பு இப்போ அவருக்கே சொருகிட்டார்கள். வாரிசு படத்தை எப்படி பொங்கலுக்கு வெளியிடவது என்று தெரியாமல் தில் ராஜு முழித்து வருகிறாராம். யானை தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல எப்போதோ இவர் சொன்ன விஷயம் தற்போது இவருக்கே வினையாக திரும்பி உள்ளது.
விஜயும் இப்போது பெரும் சிக்கலில் தவித்து வருகிறார். அதுமட்டுமின்றி துணிவு படம் வெளியாவதால் தமிழ்நாட்டிலும் அதிக திரையரங்குகள் வாரிசு படத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இதனால் முதல் நாள் வசூலில் விஜய்க்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Also Read : விஜய்க்கு மரியாதை அவ்வளவுதான்.. வாரிசு ரிலீஸ் குறித்து வெளுத்து வாங்கிய பிரபலம்