நெல்சனால் வருத்தத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. தவறவிட்ட வாய்ப்பால் வேதனையில் இருக்கும் ரஜினி

சூப்பர் ஸ்டார் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் ரஜினி ஆர்வத்துடன் கதைகளை கேட்டு வருகிறார்.

அதில் அவர் அடுத்ததாக லைக்கா நிறுவனத்திற்கு படம் பண்ண இருக்கிறார். இப்படி பிசியாக ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் ரஜினி சமீப காலமாக மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். அதாவது இப்போதைய தலைமுறையுடன் சேர்ந்து பணி புரிந்தால் வித்தியாசமாகவும், புது அனுபவமாகவும் இருக்கும் என்று தான் சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

ஆனால் அது தவறு என்று எப்போது வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம். ஏனென்றால் இளம் தலைமுறைகளுடன் அவருடைய மன ஓட்டம் ஒத்துப் போகவில்லை என்பதுதான் சூப்பர் ஸ்டாரின் வருத்தத்திற்கு காரணம். அந்த வகையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி சிறு அதிருப்தியில் இருக்கிறாராம்.

பொதுவாகவே நெல்சன் ரொம்பவும் ஜாலியான பேர்வழி. படப்பிடிப்பு தளத்தில் கூட அவர் கலகலப்பாக தான் சூட்டிங் நடத்துவாராம். அதன் காரணமாகவே அவருக்கும் ரஜினிக்கும் சில விஷயங்களில் ஒத்துப் போகாமல் இருந்திருக்கிறது. இதனால் சூப்பர் ஸ்டார் தனக்கு நெருக்கமானவர்களிடம் மூத்த இயக்குனர்களின் படங்களிலேயே நடித்திருக்கலாம் என்று வருத்தப்பட்டு பேசி வருகிறாராம்.

மேலும் பி வாசுவின் இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க ரஜினியிடம் தான் முதலில் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் சில காரணங்களால் ரஜினி அதில் நடிக்கவில்லை. அந்த வாய்ப்பை தவறவிட்டதை நினைத்து அவர் இப்போது வருத்தப்பட்டு கொண்டிருக்கிறாராம். பேசாமல் அந்த படத்திற்கே ஓகே சொல்லி இருக்கலாம் என்று இப்போது நொந்து போய் இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்த காரணத்தினால் தான் வேறு வழி இல்லாமல் ஜெயிலர் படத்தில் அவர் நடித்து வருவதாகவும் அவர் தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். சூப்பர் ஸ்டார் இப்படி புலம்பும் அளவிற்கு நெல்சன் என்ன செய்தார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இருப்பினும் இனிமேலாவது சுதாரித்துக் கொண்டு ரஜினி தனக்கு பிடித்த இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.