செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

புடவைல எரும மாடு மாதிரி இருக்க.. போட்டியாளரை கண்ட மேனி திட்டி பதிவிட்ட ரட்சிதாவின் முன்னாள் கணவன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கு சீரியலில் நடிக்கும் போதே ஏராளமான ரசிகர்கள் இருந்த நிலையில் பிக் பாஸுக்கு வந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவர் எந்த விஷயத்துக்கும் குரல் கொடுக்காமல் ஒரே மாதிரியான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்.

மேலும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ரட்சிதாவிடம் எல்லை மீறி பழகிய போதும் அவர் விலகினாரே தவிர எதிர்த்து எதுவும் பேசவில்லை. இதுதான் இவருடைய நிஜ குணாதிசயமா என பலரும் ஆச்சரியப்பட்டனர். மேலும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த வாரத்தில் இருந்த தனது விளையாட்டை ரட்சிதா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

இந்நிலையில் ரட்சிதா தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால் இவருக்கு ஆதரவாக தான் தினேஷ் குரல் கொடுத்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் அதிக முறை புடவை கட்டுவது ரட்சிதா தான். ஒரு நாள் எல்லோரும் புடவை அணிந்திருக்கும் சமயத்தில் மைனா நந்தினி ரட்சிதாவை பார்த்து உனக்கு தான் புடவை அம்சமாக இருப்பதாக கூறினார்.

அப்போது அருகில் இருந்த ஜனனிக்கு இப்படி சொன்னது பொறுக்க முடியவில்லை. உடனே தனலட்சுமி இடம் ரட்சிதாவுக்கு புடவை நல்லாவா இருக்கு, எருமை மாட்டுக்கு கட்டின மாதிரி இருக்கு என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு ரட்சிதா ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது.

Also Read : வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை

இந்நிலையில் ரட்சிதா கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உங்களுக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் நம்பிக்கை இல்லாத நண்பர்கள், துரோகிகள். மேலும் உன்னுடைய விளையாட்டை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.

நான் ரட்திதா பக்கம் தான் உள்ளேன் என்றும் அவருக்கு தான் வாக்களித்தேன் என தினேஷ் கூறியுள்ளார். மேலும் ஜனனி மற்றும் மைனா நந்தினி இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட வேண்டாம் என ஒரு புகைப்படத்தை வெளியிட்ட உள்ளார். ஆகையால் ரட்சிதா தினேஷுடன் மீண்டும் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Rachitha-Ex-Husband-Dinesh

Also Read : ஜிபி முத்துவுக்கு கோரிக்கை வைத்த சசிகுமார்.. பிக்பாஸ்க்கு பின் இருக்கும் முக்கிய பொறுப்பு

Trending News