செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித் கொடுத்த 10 லட்சம்.. வீடுவரை சென்று அவமானப்பட்ட விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு காலத்தில் நடிகர் சங்கம் மிகப்பெரிய கடன் சிக்கலில் மாட்டியது. இதனை அடைப்பதற்காக அன்று நடிகர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஜயகாந்த், பல கலை நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் சென்று நடத்தி பணத்தை ஈட்டி நடிகர் சங்கக் கடனை அடைத்தார். அப்போது நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழ் சினிமாவில் நடித்த நடிகர், நடிகைகள் படத்திற்கு பின்னால் வேலை செய்யும் நபர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, கோலாகலமாக விஜயகாந்த் தனது மேற்பார்வையில் நிகழ்ச்சியை நடத்தினார்.

அப்போது ரஜினி, கமல், விஜய் என அனைவரையும் அவர்களது வீட்டிற்கு சென்று கலை நிகழ்ச்சிக்கு வருமாறு பத்திரிக்கை வைத்து விஜயகாந்த் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து நடிகர் அஜித்தின் வீட்டிற்கும் சென்று அழைப்பு விடுத்தார் விஜயகாந்த். உடனே நடிகர் அஜித் என்னால் கலை நிகழ்ச்சிக்கு வர முடியாது என கூறியுள்ளார். ரஜினி, கமல், விஜய் என அனைவரும் வருகிறார்கள். நீங்கள் வருவதாக வாக்குக் கொடுத்து விட்டேன் இல்லை என்றால் எனக்கு அசிங்கமாக போய்விடும்.

Also Read : பிரேமலதாவிற்கும் முன் விஜயகாந்த் காதலித்த நடிகை.. குழிபறித்த நட்பு, கறாராக பேசி பிரித்துவிட்ட மனைவி

நீங்கள் மட்டும் ஏன் வர மாட்டீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அஜித் பதில் அளிக்காமல் உடனே தன் கையில் இருந்த 10 லட்ச ரூபாயை நன்கொடையாக விஜயகாந்திடம் கொடுத்துள்ளார். இதனை கண்டு கோபப்பட்ட விஜயகாந்த் நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்படி பணத்தை கொடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என ஆதங்கத்துடன் பேசினாராம்.

விஜயகாந்தின் கோபத்தைப் பார்த்து பயந்த அஜித், உடனே என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் கோபப்பட வேண்டாம் நான் வராததற்கு பல காரணங்கள் இருக்கின்றன அந்த அளவிற்கு உங்களிடம் நான் வரவில்லை என்று சொல்வதற்கு நான் பட்ட அவமானங்கள் நிறைய இருக்கின்றன என அஜித் தன் கதையை விஜயகாந்திடம் கூறினார்.

Also Read : வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்

உடனே விஜயகாந்த் நான் பட்ட அவமானத்தை விட நீங்க அதிகம் பாதிக்கபட்டு இருக்கிறீர்கள் என வருத்தப்பட்டு உங்கள் விருப்பப்படி எதுவாயிருந்தாலும் நடக்கட்டும் வருகிறேன் என்று சென்று விட்டார். நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடித்த அவரது திரைப்படங்கள் எல்லாம், எதுவும் சரியாக ஓடாததால் பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

ஒருமுறை நடிகர் பிரசாந்த் மற்றும் அஜித்தை ஒரு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தன. அப்போது நடிகர் பிரசாந்த்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், அஜித் தலைகுனிந்து நின்ற போட்டோ அண்மையில் இணையத்தில் பரவியது.மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அஜித்தை பின் வரிசையில் அமர வைத்து, அவரை மேடையில் அழைக்கவே மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் இன்றுவரை அஜித் எந்த விழாக்களிலும் கலந்துக்காமல் பழகிவிட்டார்.

Also Read : ஆணவத்தால் அழிந்த விஜயகாந்த்.. இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் காரணம்

Trending News