ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாட்டுக்கு மட்டும் இவ்வளவு கோடிகளா.? ஷங்கர் மீது உச்சக்கட்ட கடுப்பாகிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கம் என்றாலே அதில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. இவர் படத்தை தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கியாவது சங்கரின் திரைப்படத்தில் பிரம்மாண்டத்தை உருவாக்க முனைவார்கள். இயக்குனர் ஷங்கரும் அவர்களது பணத்தை வீணடிக்காமல் ஹாலிவுட் ரேஞ்சிற்கு படத்தில் காட்டப்படும் காட்சிகளுக்கு பிரம்மாண்டத்தை அள்ளி வீசுவார்.

அதிலும் முக்கியமாக பாடல் காட்சிகளை சொல்லவா வேண்டும். பாடலை கேட்பதா, பார்ப்பதா என நாமே மெய்சிலிர்த்து போகும் வகையில் வித்யாசமான இடங்கள், நாடுகள், பல பிரம்மாண்டமான செட்டுகள் என மூக்கு மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு இயக்குனர் ஷங்கர் பல ரிஸ்குகள் எடுத்து இயக்குவார். அப்படி ஷங்கர் இயக்கிய ஒருபடத்தின் 25 நிமிட காட்சிக்காக 25 கோடிவரை செலவு செய்ததை பற்றி பார்க்கலாம்.

Also Read : 2000 கோடி பட்ஜெட், ஆனாலும் ஷங்கர் படம் வேண்டாம்.. கண்டிஷனை பார்த்து தெறித்து ஓடிய ஹீரோக்கள்

2015 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் வெளியான ஐ திரைப்படத்தில் பல பிரம்மாண்டமான காட்சிகளை இடம் பெற்றிருக்கும். இதில் நடிகர் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த நிலையில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு உலகம் முழுவதும் 240 கோடி வரை வசூலை ஈட்டியது.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் விக்ரம் இரண்டு வேடங்களில்  நடித்திருப்பார். சிதைந்த முகத்தோற்றம், குள்ளமான உடலமைப்பு என ஒரு வேடத்திலும், கட்டுமஸ்தான உடல், ஆணழகன், மிஸ்டர் தமிழ்நாடு என்ற மற்றொரு கெட்டப்பிலும் விக்ரம் களமிறங்கி அசத்தலாக நடித்திருப்பார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டான நிலையில், இந்த பாடல்களை எடுப்பதற்காகவே ஷங்கர் மிகவும் மெனக்கெட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : லோகேஷ்க்கு போட்டியாக 4 மல்டி ஸ்டார்களுடன் களமிறங்கும் ஷங்கர்.. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வேள்பாரி

ஐ திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே பார்ப்பதற்கும், கேட்பதற்கும் பிரமாதமாக இருக்கும். இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான லேடியோ பாடலில் எமிஜாக்சனின் மேக்கப், உடை உள்ளிட்டவை, அசலத்தாலாக இருக்கும், அதேபோல பூக்களே என்ற பாடல் சீனாவிற்கு சென்று அங்குள்ள பூக்களை அழகாக ஷங்கர் காட்சிப்படுத்தியிருப்பார். ஐலா ஐலா என்ற பாடலில் இந்திய விளம்பரங்களை காட்சிப்படுத்தும் வகையில் அமைத்திருப்பார்.

இப்படி இவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இப்பாடல்கள் 3 மணி நேர திரைப்படத்தில் 25 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் .ஆனால் இந்த ஒவ்வொரு பாடல் காட்சிகளுக்கும் இயக்குனர் ஷங்கர் 5 கோடி வரை செலவு செய்தாராம். அப்படி மொத்தமாக கணக்கு போட்டு பார்த்தால் 5 பாடல் காட்சிகளுக்கு 25 கோடி வரை செலவு செய்துள்ளார். படத்தின் 25 நிமிட காட்சிக்காக மட்டுமே இவ்வளவு கோடி செலவு செய்த ஒரே இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர்தான்.

Also Read : மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

Trending News