சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு தான் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்கள் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஒரு நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பல திரைப்படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருப்பவர் தான் அந்த தீ நடிகை.
ஆரம்பத்தில் இவருடைய நடிப்பு பலராலும் கிண்டல் அடிக்கப்பட்டாலும் இப்போது அந்த நடிகை நடிப்பில் கைதேர்ந்தவராகி உள்ளார். சமீபத்தில் இவர் நடித்த திரைப்படம் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்ற நிலையில் அதற்கடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமும் விமர்சன ரீதியாக அனைவரையும் கவர்ந்துள்ளது.
Also read: பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்
கடந்த சில வருடங்களாகவே இந்த நடிகையைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவி வந்தது. அதிலும் டாப் ஹீரோ ஒருவருடன் இவர் அளவுக்கு அதிகமாக நெருக்கம் காட்டி வருவதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.
அதாவது ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை சந்திக்காத நடிகைக்கு இப்போது அந்த தொல்லை ஏற்பட்டிருக்கிறதாம். தற்போது ஒன்றிரண்டு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவருக்கு வந்த ஒரு பெரிய வாய்ப்பு கைநழுவி போயிருக்கிறது. ஏனென்றால் அந்த படத்தில் அட்ஜஸ்ட்மென்ட் சம்பந்தமாக சில கண்டிஷன்கள் நடிகையிடம் கூறப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ந்து போன அந்த நடிகை தற்போது சினிமாவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இன்று டாப்பில் இருக்கும் நடிகைகள் பலரும் இதுபோன்று அட்ஜஸ்ட் செய்து முன்னுக்கு வந்தவர்கள் தான். ஆனால் இந்த நடிகை இப்படித்தான் நான் சினிமாவில் வளர வேண்டும் என்றால் அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு வேண்டாம். வேறு கௌரவமான வேலை பார்த்து நான் பிழைத்துக் கொள்வேன் என்று கூறி இருக்கிறார். தற்போது மிகுந்த கவலையில் இருக்கும் அந்த நடிகை விரைவில் நடிப்புக்கு குட்பை சொல்ல இருக்கிறார்.