சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பரபரப்பாக நடந்த தேர்தல், வெற்றி யாருக்கு?. பாக்கியலட்சுமியில் எதிர்பாராத டுவிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது சுவாரசியமான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது பாக்யா குடி இருக்கும் காலனியில் பல பிரச்சனைகள் உள்ளது. அடிக்கடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய் கடிக்கிறது.

அதுமட்டுமின்றி மின்விளக்குகள் எதுவும் சரியாக எறியவில்லை என பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. ஆகையால் இப்போது நடக்க இருக்கும் செகரட்டரி தேர்தலில் பாக்கியா போட்டியிடுகிறார். தன்னுடைய குடும்பம் மற்றும் காலனியில் உள்ளவர்கள் வற்புறுத்தியதால் பாக்யா நிற்கிறார்.

Also Read : களை கட்டிய டபுள் எவிக்சன்.. உறுதியாக அந்த ரெண்டு வேஸ்ட் பீஸ்களை தூக்கி வெளியில் போடும் பிக்பாஸ்

இவருக்கு எதிராக ராதிகாவை நிற்கும்படி கோபி கட்டாயப்படுத்தியதால் அவரும் போட்டியிடுகிறார். இதனால் யார் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் விறுவிறுப்பாக தேர்தல் நடந்து ஓட்டு எண்ணிக்கையும் அதே நாளில் நடைபெறுகிறது.

ராதிகாவிடம் கோபி நம்ம தான் ஜெயிப்போம் என்று ஆறுதல் கூறுகிறார். அதேபோல் கோபியின் அப்பா ஈஸ்வரி இடம், பாக்யா தான் ஜெயிப்பாள் இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசல்ட் தெரிஞ்சிடும், கோபி அப்ப எங்க போய் மூஞ்ச வெச்சுக்கறான்னு பாப்போம் என்று கூறுகிறார். கடைசியில் அதிக வாக்குகள் பெற்று பாக்யா தான் வெற்றி பெறுகிறார்.

Also Read : டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு தண்ணி காட்டும் சன் டிவி.. கிளைமாக்ஸ் காட்சியை வைத்து முன்னேறிய பாரதிகண்ணம்மா

இதனால் ராதிகா, கோபி மீது உச்சகட்ட கோபம் அடைகிறார். மேலும் செல்வி மற்றும் எழில் ஆகியோர் பாக்யாவின் வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடுவதால் மேலும் ராதிகா எரிச்சல் அடைகிறார். இதனால் அங்கு நிற்க அவருக்கு மனம் இல்லாமல் விறுவிறுவென வீட்டுக்கு செல்கிறார்.

மேலும் கோபியிடம், நான் பாட்டுக்கு சும்மா தானே இருந்தேன், தேர்தல் அது இதுன்னு சொல்லி இப்படி என்னை எல்லோரும் முன்னாடியும் அவமானப்படுத்திடிங்களே என கத்துகிறார். ஆகையால் கோபி மற்றும் ராதிகா உறவு இடையே விரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு பல எதிர்பார்க்காத டுவிஸ்ட் உடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

Trending News