வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இணையத்தை தெறிக்க விடும் இந்த வார டிஆர்பி லிஸ்ட்.. வந்த வேகத்திலேயே டஃப் கொடுக்கும் புது சீரியல்

ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களிலும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் டிஆர்பி ரேட்டிங் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில், வந்த வேகத்திலேயே மற்ற சீரியல்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் கொடுத்திருக்கிறது சன் டிவியின் புத்தம் புது சீரியல்.

இதில் 10-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 9-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் இனியா சீரியலும் இடம் பிடித்துள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் ஜனனிக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்த பட்டம்மாள் அப்பத்தா எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியாத நிலையில் குணசேகரன் தான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்று ஜனனி சந்தேகப்படுவது போலவும், குணசேகரனைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் பட்டம்மாள் அப்பத்தாவை தேடுவது போல கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாணி போஜனிடம் மயங்கி, டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட 4 நடிகர்கள்.. அடுத்தடுத்து 2 பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ

கண்ணான கண்ணே: ஒரு அப்பாவின் மீது மகள் இவ்வளவு பாசமாக இருக்க முடியுமா என்ற உதாரணத்திற்கு எடுத்துக்காட்டாக கண்ணான கண்ணே சீரியல் உள்ளது. சூழ்நிலை கைதியாக மாட்டியுள்ள தனது அப்பாவை மீரா பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நிரபராதி என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் யார் குற்றவாளி என்று இன்னும் தெரியப்படுத்தாத நிலையில் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

பாரதி கண்ணம்மா: மறுபடியும் முதல்ல இருந்தா என ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்வது போல், எல்லா உண்மையும் தெரிந்த பிறகு பாரதியின் பிரிந்து செல்லும் கண்ணம்மா எங்க இருக்கிறார் என்பதை வைத்து இந்த வாரம் முழுவதும் ஓட்டிவிட்டனர். இதன் பிறகு இந்த சீரியலின் 2-ம் பாகம் துவங்கப் போகிறது லஷ்மி மற்றும் ஹேமா இருவரை வைத்து தான் கதையை உருவாக்கப் போகின்றனர்.

ஒருவேளை பாரதி தொலைந்து போன கண்ணம்மாவையும் குழந்தைகளையும் கண்டுபிடித்து விடுவாரா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த வாரம் முழுவதும் ஆர்வத்துடன் இந்த சீரியலை பார்த்தனர். ஆகையால் டிஆர்பி-யில் இந்த சீரியலுக்கு 4-ம் இடம் கிடைத்திருக்கிறது.

வானத்தைப்போல: இந்த சீரியலில் சின்ராசு பொன்னி சந்தியா இவர்களிடையே நடக்கும் லூட்டியிலிருந்து ஒரு வாரம் விடுமுறை விட்டது போல் சந்தியா கேம்பிற்கு செல்வது போலவும் அதே சமயம் வெற்றி மனதில் துளசி தான் உள்ளாரா என்பதை சந்தேகப் பார்வையில் வள்ளி கண்டறிவது போலவும் கதை அமைந்துள்ளது. வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

சுந்தரி: இந்த சீரியலில் பழனியை கொலை செய்தது அனு தான் என்று தெரிந்திருந்தும். அனுவின் பிரச்சினையை மனதில் வைத்து முருகன் தான் அந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். சுந்தரி தனது மாமாவை சிறையிலிருந்து வெளியில் எடுப்பதற்கு போராடிக் கொண்டிருப்பது போல் கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. சுந்தரி சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் விக்னேஷ் வெளியூர் சென்று இருந்த நிலையில் வேதவள்ளியின் சூழ்ச்சியால் தேவி தற்கொலை முயற்சிக்கு முடிவெடுத்துள்ளார் போலவும், அதற்கு முன் தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலும் அன்புவின் மனதில் உள்ள கோபத்தினை எடுத்துக்கூறி புரிய வைப்பது போல் கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது. கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களில் புது வரவாக வந்த இனியா சீரியல் வெளியான ஒரு வாரமே ஆன நிலையில் 7-வது இடத்தை பிடித்து மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Trending News