ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

நயன்தாரா படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. ஆஸ்கர் வாங்க விடமால் திரையரங்கு வைத்த செக்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிக்காத பிரச்சனையே இல்லை என்று சொல்லலாம். அவ்வாறு நயன்தாராவையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாமல் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா தனது படவேலைகளில் படு பிஸியாக உள்ளார். பாலிவுட்டில் அறிமுகப்படமான ஜவான் படத்தில் நடித்த வருகிறார்.

இதைத்தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கனெக்ட் படத்தில் நடித்துள்ளார். திகில் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

Also Read : உதயநிதியை தலையில் துண்டை போட வைத்த 5 படங்கள்.. நயன்தாரா, நண்பனை நம்பி மூக்குடைந்த சோகம்

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடலுக்கான லிரிக்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது கனெக்ட் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. இப்படம் 1 மணி நேரம் 39 நிமிடங்கள் கொண்டுள்ளது. மேலும் இந்த படத்தை இடைவெளி இல்லாமல் எடுத்துள்ளார் இயக்குனர்.

ஆனால் இப்படத்தை வாங்க தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். அதாவது இடைவெளி இல்லாமல் படத்தை வெளியிட்டால் கேண்டினில் வியாபாரம் ஆகாது. ஆகையால் கேண்டினில் இருந்து வரும் லாபம் கனெக்ட் படத்தால் தியேட்டர் உரிமைகளாளருக்கு கிடைக்காமல் போகும்.

Also Read : மீண்டும் வெறி கொண்டு களத்தில் இறங்கும் நயன்தாரா.. செம ஸ்டைலிஷ் ஆன லேட்டஸ்ட் புகைப்படம்

ஆகையால் கனெக்ட் படத்திற்கு இடைவெளி விட்டு தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இது இடைவெளி இல்லாத படம் என ஏற்கனவே அஸ்வின் கூறியுள்ள நிலையில் இப்போது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் எப்படியாவது ஒரு ஆஸ்கர் வாங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நயன்தாராவின் நினைப்பில் மண்ணள்ளி போட்டு உள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி இடைவெளியுடன் தான் கனெக்ட் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read : உதவி இயக்குனரை ஏமாற்றிய முருகதாஸ்.. பழைய பகைக்கு பழி தீர்த்துக் கொண்ட நயன்தாரா

Trending News