திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பிக் பாஸ் வரலாற்றிலேயே 4 முறையும் கேப்டனான மார்க்கண்டேயன்.. சினேகன், யாஷிகா சாதனை முறியடிக்கப்பட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 11 வது வாரம் தொடங்கியுள்ளது. இப்போது இந்த நிகழ்ச்சியில் போட்டிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் கடந்த 10 வாரங்களாக நாமினேஷன் ஆகாத ஷிவின் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார்.

மேலும் விக்ரமன், அசீம், ரக்ஷிதா, தனலட்சுமி, கதிரவன், மைனா நந்தினி ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்சமாக மூன்று முறை தான் கேப்டன் பதவியை சிலர் தக்க வைத்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் மற்றும் யாஷிகா இருவரும் 3 முறை கேப்டனாக பதவி வகித்துள்ளனர்.

Also Read : ஜனனி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்.. புறம் பேசியதற்கு அள்ளிக் கொடுத்த விஜய் டிவி

இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மைனா நந்தினி மூன்று முறை கேப்டனாக இருந்துள்ளார். இவர்களின் சாதனையை முறியடித்து பிக் பாஸ் வரலாற்றிலேயே நான்காவது முறையாக கேப்டன் பதவியை ஏற்றுள்ளார் மணிகண்டன். இந்த வாரமும் இவர் எவிக்ஷனில் இருந்து தப்பித்துள்ளார்.

பிக் பாஸ் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் மணிகண்டன் சின்னத்திரை தொடர் மற்றும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் ஆவார். மைனா நந்தினியின் நண்பனான இவர் அவருக்கு ஒரு தலை பட்சமாக எப்போதுமே சப்போர்ட் செய்து வருகிறார்.

Also Read : 7 பேருடன் ரெடியான இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்.. வாயாடி தூக்கி வீச போகும் பிக் பாஸ் வீடு

இது ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. ஆனால் டாஸ்க் என்று வரும் வேளையில் மணிகண்டனை அடிச்சு ஆளே இல்லை. ஒரு டாப் கண்டஸ்டண்டாக தன்னால் முடிந்த அளவு உழைப்பை போடுகிறார். கடந்த வாரம் நாமினேஷனில் மணிகண்டன் இடம்பெற்ற நிலையில் ஜனனி வெளியேறினார்.

இந்த வாரம் நாமினேஷனில் மணிகண்டன் இடம்பெற்றால் பிக் பாஸ் வீட்டை விட்டு போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பிக் பாஸ் சீசன் 11 வது வார தலைவராக மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகையால் இந்த வார எவிக்ஷனில் இருந்தும் மணிகண்டன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6ல் பாப்புலரான 5 பிரபலங்கள்.. வாய் மட்டும் இல்லைனா உன்னையெல்லாம் நாய் கவ்விக்கிட்ட போயிடும்

Trending News