திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முன்கூட்டியே நடத்தப்படும் பிக் பாஸ் எலிமினேஷன்.. அடுத்த சவாலுக்கு அவசர அவசரமாக கிளம்பும் ஆண்டவர்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது.

மேலும் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்கள் மட்டுமல்லாமல் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 6-வது சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுப்பு வழங்குவதால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு மவுசு அதிகம் தான்.

Also Read: கண்ணீரில் மிதக்க விட்ட பிக்பாஸ் வீடு.. அசீமுக்கு தோல் கொடுத்த விக்ரமன்

இந்நிலையில் முன்பு அரசியலில் ஆர்வம் காட்டியது போல், இப்போது மறுபடியும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார் கமலஹாசன். இதனால் வரும் சனிக்கிழமை ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு டெல்லி கிளம்புகிறார்.

இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையின் எபிசோடுக்கான சூட்டிங் வெள்ளிக்கிழமையே நடந்து முடிந்து விடும். ஆகையால் வெள்ளிக்கிழமை அன்று யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி விடும்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6ல் பாப்புலரான 5 பிரபலங்கள்.. வாய் மட்டும் இல்லைனா உன்னையெல்லாம் நாய் கவ்விக்கிட்ட போயிடும்

இவ்வாறு கமலஹாசன் டெல்லி செல்ல உள்ளதால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் விஜய் டிவி உள்ளது. இதில் இதுவரை நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாத சிவின் மற்றும் விக்ரமன், அசீம், ரட்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, கதிரவன், மைனா உள்ளிட்ட 7 பேர் கடந்த திங்கட்கிழமை அன்று ஓப்பன் நாமினேட் செய்யப்பட்டனர்.

ஆகையால் வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் படப்பிடிப்பில் இந்த சீசனில் ஜனனியை தொடர்ந்து அடுத்து நாளை யார் வெளியே போகிறார் என்பது தெரிந்துவிடும். அத்துடன் சிலர் கமல் அரசியலில் ஈடுபடுவதை விரும்பியதால் மீண்டும் அடுத்த சவாலுக்கு கிளம்பியதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: ஜனனி பிக் பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம்.. புறம் பேசியதற்கு அள்ளிக் கொடுத்த விஜய் டிவி

Trending News