செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரஜினி கொடுத்த ஜெயிலர் அப்டேட்.. சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என்று ரஜினியின் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

அவர்களுக்காகவே ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி அவருடைய கதாபாத்திரம் பற்றிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. முத்துவேல் பாண்டியன் என்னும் கேரக்டரில் நடிக்கும் ரஜினி அந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத லெவலில் கலக்கி இருக்கிறாராம்.

Also read: ரேஸில் எப்போதுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.. 7 வருடத்திற்கு முன்பே ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளிய அஜித்

அது பற்றி ரஜினியே தற்போது ஒரு சூப்பர் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அதாவது அவருடைய பிறந்தநாளுக்கு பெரும் புள்ளிகள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருக்கின்றனர். மேலும் ரசிகர்களும் அவருடைய பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர். அப்போது வாழ்த்து சொல்லிய பலரும் அவரிடம் ஜெயிலர் படத்தை பற்றிய தகவலை தான் கேட்டிருக்கிறார்கள்.

அதில் இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் சூப்பர் ஸ்டாருக்கு போன் செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அப்போது அவர் ஜெயிலர் திரைப்படத்தை பற்றியும் விசாரித்து இருக்கிறார். அதற்கு சூப்பர் ஸ்டார் படம் எதிர்பார்த்தபடியே நன்றாக வந்திருப்பதாகவும் ஜனவரி மாதத்திற்குள் படம் முழுவதும் முடிந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.

Also read: ரஜினியை வைத்து பல நூறு கோடி பிசினஸில் இறங்கிய லைக்கா.. குடும்பத்தில் யாரையும் விட்டு வைக்காத ரகசியம்

தற்போது 60% படம் முடிவடைந்ததிலேயே ரஜினி மிகவும் சந்தோஷமாக இருக்கிறாராம். அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்திருப்பதாகவும், முழுக்க முழுக்க ஆக்சன் ட்ரீட்டாக ஜெயிலர் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தின் மூலம் பல விமர்சனங்களை சந்தித்த நெல்சன் இந்த படத்தை சொதப்பி விடக்கூடாது என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் தெரிவித்திருக்கும் இந்த விஷயம் அவர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் நிச்சயம் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மிகப் பெரும் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்த வரும் ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல வரப் பிரசாதமாய் இருக்கும் என்று பட குழு தெரிவித்துள்ளது.

Also read: விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

Trending News