இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற கோலிவுட்டின் ஜாம்பவான்களுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படங்களை இயக்கியவர் இவர் தான். தன்னுடைய பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
கடல்: நடிகர் கௌதம் கார்த்திகையும், நடிகை துளசி நாயரையும் கடல் படத்தின் மூலம் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். மேலும் நடிகர்கள் அர்ஜுன் மற்றும் அர்விந்த் சுவாமிக்கு ஒரு நல்ல கம்பேக்காக இந்த கதைக்களத்தை எழுதியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இருந்தாலும் இந்த படம் வெற்றி பெறவில்லை.
யுவா: மணிரத்னம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் இயக்கிய திரைப்படம் இது. தமிழில் ஆயுத எழுத்து என்னும் பெயரிலும், ஹிந்தியில் யுவா என்னும் பெயரிலும் ரிலீஸ் ஆனது. மூன்று இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழ் வெற்றியடைந்த அளவிற்கு இந்த படம் இந்தியில் எடுபடவில்லை.
கன்னத்தில் முத்தமிட்டால்: நடிகர் மாதவனை மற்றுமொரு கோணத்தில் காட்டிய திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். குழந்தை தத்தெடுத்து வளர்ப்பது, இலங்கை தமிழர்களின் நிலை என நிறைய விஷயங்கள் கலந்து வெளியான திரைப்படம் இது. இந்த படத்தில் நடித்த கீர்த்தனா பார்த்திபனுக்கு அந்த ஆண்டுக்கான தேசிய விருது கூட கிடைத்தது.
Also Read: பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதியை லாக் செய்த மணிரத்னம்.. அடுத்த வசூல் வேட்டை ஆரம்பம்
காற்று வெளியிடை: தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த நடிகர் கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கிய திரைப்படம் இது. அதிதி ராவ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஒரு ராணுவ வீரனும், டாக்டரும் காதலிக்கும் அழகான காதல் கதை. ஏ ஆர் ரகுமான் இசை, காவியமான காதல் என்றாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இந்த படம் தோல்வியடைந்தது.
ஓ காதல் கண்மணி: இன்றைய நவீன காலத்தில் ட்ரெண்டாக இருக்கும் லிவிங்க் ரிலேஷன்ஷிப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். துல்கர் சல்மானும், நித்யா மேனனும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். லிவிங்க் ரிலேஷன்ஷிப்பை பார்ப்பவர்கள் முகம் சுளிக்காத அளவிற்கு கதைக்களத்தை அமைத்திருந்தாலும் படம் வெற்றியடையவில்லை.
Also Read: 4 வருடமா கிடப்பில் போட்ட மெகா பட்ஜெட் படம், தூசி தட்டிய சுந்தர் சி.. மணிரத்னம் பற்ற வைத்த நெருப்பு