பாலிவுட்டின் பிரபல இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள பாந்த்ரா குடியிருப்பில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலைக் கேட்ட ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டது. அதன் பின் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட சுஷ்வந்த் மரணம் தொடர்பான வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின் சுஷாந்த் சிங் மரணத்தில் கொலை நடுங்க வைக்கும் வாக்கு மூலத்தை அளித்து அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது சுஷாந்த்தை பிரேத பரிசோதனை செய்த கூப்பர் மருத்துவ ஊழியர் ரூப்குமார் அதிரடியான வாக்குமூலத்தை தற்போது அளித்திருக்கிறார்.
Also Read: சுஷாந்த் சிங் நடிக்கவிருந்த 6 படங்கள்.. வளர்ச்சி பிடிக்காமல் கேவலமாக நடந்து கொண்ட நடிகர்கள்
சுஷாந்த் சிங் உடன் அன்றைய தினத்தில் மொத்தம் 5 உடல்கள் உடற் கூறாய்விற்கு வந்திருக்கிறது. ஆகையால் உயர் அதிகாரிகளின் அறிவுரையின்படி சுஷாந்த் சிங் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது புகைப்படங்கள் மட்டுமே கிளிக் செய்யுமாறு வீடியோ எடுக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டனர்.
ஆனால் உடலில் பல தடயங்கள் இருந்தது. இரவில் தான் பிரேத பரிசோதனை செய்தாலும் அவரது உடல் சிதைந்து நிலையில், கழுத்தில் இரண்டு மூன்று காயங்கள் இருந்தது. கை கால்கள் உடைந்த நிலையில் அவர் தூக்கில் தொங்கி இருக்க வாய்ப்பில்லை என தெளிவாக காட்டியது. மேலும் கழுத்தில் காணப்பட்ட காயங்கள் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.
Also Read: சுஷாந்த் சிங் போல பிரசாந்தை வைத்து அஜித்தை ஓரங்கட்டிய தமிழ் சினிமா.. அதற்கு தல கொடுத்த பதிலடி
நிச்சயமாக அவர் தூக்கில் தொங்கியதால் தான் இறந்ததற்கான சாத்தியம் இல்லை. இதனால் வேலையில் யாருக்கும் பிரச்சினை ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் தான் இவ்வளவு நாள், இந்த உண்மைகளை எல்லாம் தெரியப்படுத்தாமல் இருந்ததாக தற்போது கூப்பர் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி வந்த ரூப்குமார் ஒன்பதை மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற பின் தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே ரசிகர்கள் பலரும் சுஷாந்த் சிங் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை, தற்போது கூப்பர் மருத்துவமனையின் பிணவறை ஊழியர் ரூப்குமார் அளித்திருக்கும் வாக்குமூலம் தெளிவுபடுத்தியதால், சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிபிஐ தரப்பில் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் இந்த செய்தியை ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: சுஷாந்த் சிங் கொலை தான் செய்யப்பட்டார்? சுஷாந்த் மாமாவின் பேச்சால் தீவிரமடையும் விசாரணை