வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

12வது வார நாமினேஷனில் சிக்கிய 8 நபர், தப்பித்த ஒருவர்.. உறுதியாக வெளியேறப் போகும் போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி வாரங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் 12 வது வாரத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. கடந்த வாரம் தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இப்போது ஒன்பது நபர்கள் உள்ளனர். இந்நிலையில் இதில் உள்ள 8 பேருமே இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு அதிர்ஷ்டசாலி மட்டும் தப்பித்து உள்ளார். இதனால் அவர் கண்டிப்பாக அடுத்த வாரம் எலிமினேஷன் ஆக வாய்ப்பு இல்லை.

Also Read : திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

அதாவது இப்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா நந்தினி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏ டி கே, கதிரவன், அமுதவாணன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர். இதில் ரக்ஷிதா இந்த வார தலைவர் என்பதால் அவரை தவிர மற்ற அனைவருமே அடுத்த வாரம் எலிமினேஷனில் தேர்வாகியுள்ளார்கள்.

இதிலிருந்து யார் எலிமினேஷன் ஆவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் கண்டிப்பாக காப்பாற்றப்படுவார் என்பது அனைவரும் அறிந்து அதுதான். இவர்களைத் தொடர்ந்து கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோருக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.

Also Read : பெரிய பணக்காரரை வளைத்து போட்ட விஜய் டிவியின் முக்கிய பிரபலம்.. சத்தமில்லாமல் செய்யப்போகும் 2வது திருமணம்

ஆகையால் மைனா நந்தினி, ஏடிகே, மற்றும் மணிகண்டன் இந்த மூவருள் ஒருவர்தான் இந்த வாரம் கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர். அதிலும் குறிப்பாக ஏடிகே போக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டதால் பிக் பாஸ் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆகையால் இந்த வாரம் பிக் பாஸ் ஏடிகேவை வெளியேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு வாரங்களில் உணர்ச்சிப்பூர்வமான டாஸ்க்கள் வர அதிக வாய்ப்புள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பங்கள் வர உள்ளனர். அதில் அசீம் மற்றும் ரக்ஷிதா ஆகியோரின் குடும்பத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Also Read : டிஆர்பி-யில் பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் டாப் சீரியல்கள்.. அசுரத்தனமான வேகம் காட்டிய சன் டிவி

Trending News