வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்ட தில்ராஜு.. பணத்திற்காக போடும் இரட்டை வேஷம்

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. வம்சி இயக்கி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது தொடர்ந்து தற்போது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தில் ராஜு துணிவு திரைப்படத்தை ஆந்திராவில் சில பகுதிகளில் வெளியிட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை விட விஜய்க்கு தான் அதிக மாஸ் இருக்கிறது என்றும் அவர்தான் நம்பர் ஒன் என்று சொல்லி சொல்லியே அவர் தமிழ்நாட்டில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார்.

Also read: இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

அந்த விஷயம் இப்போது கூட சோசியல் மீடியாவில் அஜித், விஜய் ரசிகர்களுக்கிடையே பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படி செய்வதெல்லாம் செய்துவிட்டு தற்போது சத்தமே இல்லாமல் அவர் துணிவு திரைப்படத்தை சில முக்கிய இடங்களில் வெளியிட இருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதன் மூலம் அவர் ரசிகர்களை மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி வருகிறார். அதேபோன்று துணிவு திரைப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாரிசு திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் சில முக்கியமான இடங்களில் வெளியிட இருக்கிறது.

Also read: தில் ராஜுவால் விஜய்க்கு வந்த பேராபத்து.. ஊம கோட்டானாக இருந்து ஸ்கோர் செய்த அஜித்

ஏற்கனவே அவர் வாரிசு திரைப்படத்தை வெளியிடவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் இப்போது படத்தை வெளியிட இருப்பதும் சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. எதற்காக அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி பேச வேண்டும் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் அவர்கள் இருவரும் ஒரு பிசினஸ்மேனாக பணத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்து வம் கொடுத்து வருவதாகவும் ரசிகர்களை பற்றி யோசிக்கவில்லை என்றும் பேசப்பட்டு வருகிறது. தற்போது இந்த விஷயம் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இதை வைத்து விஜய், அஜித் ரசிகர்கள் மீண்டும் ஒரு சண்டையை ஆரம்பித்து விடாமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Also read: எது பேசினாலும் சர்ச்சையாகிறது.. நான் நிறைய சாதிக்கணும், வாரிசு படத்தால் நொந்து போன பிரபலம்

Trending News