புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் யுனிவர்ஸ்.. 50 நாட்கள் இரவு பகலாக நடக்க உள்ள படப்பிடிப்பு

பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் படுச்சோராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய் வாரிசு படத்திற்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு தளபதி 67 படத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் தன்னுடைய படங்களின் தொடர்ச்சியாக எடுக்கக்கூடிய திரைப்படங்களை லோகேஷ் யுனிவர்ஸ் என்கின்ற பெயரில் எடுத்து வெளியிடப் போவதாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் தற்போது விஜய்யின் தளபதி 67 படமும் தயாராகுவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. அதற்கேற்றார் போல் இப்போது லோகேஷ் யுனிவர்ஸ் சார்பில் தளபதி 67 படத்தை குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கிறது.

Also Read: தளபதி 67-ல் வில்லனாக களமிறங்கும் 2 இயக்குனர்கள்.. அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்ட லோகேஷ்

ஏனென்றால் தளபதி 67 படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள பிரசாந்த் லேப்-பில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஏஆர் ரகுமானின் ஸ்டுடியோவில் படத்திற்கான பாடல்கள் ரெக்கார்ட் செய்யப் போகின்றனர்.

அதுமட்டுமின்றி தளபதி 67 பட குழு பொங்கல் பண்டிகைக்கு பிறகு 50 நாட்கள் இரவு பகலாக காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்த தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே தளபதி மற்றும் அனிருத் காம்போவில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது போல் இந்த படத்தின் பாடல்களும் டக்கராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஹாலிவுட் படத்தை அட்டை காப்பியடித்த திரிஷாவின் ராங்கி.. தளபதி 67 பட நடிகைக்கு வந்த சோதனை

மேலும் விஜயின் வாரிசு படம் பக்கா சென்டிமென்ட் படமாக இருக்கும் என்பதால் எப்போதுமே விஜய்யை மாஸ் ஹீரோவாக பார்க்கும் ரசிகர்களுக்கு தளபதி 67 படத்தை தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர் இருப்பினும் வாரிசு படத்தில் வித்தியாசமான விஜய்யை பார்க்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால் வாரிசு படத்திற்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டு தற்போது தளபதி 67 படுத்திருக்கான படப்பிடிப்பில் விஜய் தீவிரமாக செயல்பட போகிறார். இதனால் தளபதி 67 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 10 நாட்கள் நடைபெற உள்ளது. அதன் பிறகு 50 நாட்கள் காஷ்மீரில் தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Also Read: ஓவரா அலைக்கழிக்கும் லோகேஷ்.. தளபதி 67ஆல் குழம்பி போயிருக்கும் விஜய்

Trending News