செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கொல மாஸான ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட துணிவு படக்குழு.. கெத்து காட்ட தயாரான அஜித்

வினோத், அஜித் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் எந்தவித அப்டேட்டும் இல்லாமல் அமைதியாக இருந்த படக்குழு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவே பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

அந்த வகையில் முதல் பாடலை தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான பாடல்களும், போஸ்டர்களும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் வெளியான ட்ரெய்லர் சக்கை போடு போட்டது. இப்போதும் கூட அந்த ட்ரைலரை பற்றி பலரும் சிலாகித்து பேசி வருகின்றனர். அதிலும் அஜித்தின் கதாபாத்திரம் எப்படி அமைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ட்ரைலர் அதிகரிக்க வைத்திருக்கிறது.

Also read: வாரிசை விட எதிர்பார்ப்பை அதிகரித்த துணிவு சஸ்பென்ஸ்.. ட்ரெய்லரால் ரிலாக்ஸான அஜித்

ஏற்கனவே இந்த படத்தில் அவர் நெகட்டிவ் ரோலில் நடிக்கப் போகிறார் என்று கூறிவந்த நிலையில் ட்ரெய்லரில் அவர் காட்டிய அதிரடியே ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் படத்தில் 17 இடங்களில் சென்சார் போர்டு பீப் சவுண்டு போட்டதிலேயே படத்தில் எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெளிவாக புரிந்தது.

ரிலீஸ் தேதியை லாக் செய்த துணிவு

thunivu-ajith
thunivu-ajith

இப்படி பெரும் ஆவலை தூண்டி இருக்கும் இந்த படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இன்று வெளியான வாரிசு ட்ரெய்லர் தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது. இருப்பினும் துணிவு படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் வாரிசு ட்ரெய்லர் பார்க்கும் போதே கதை இதுதான் என்று யூகிக்க முடிகிறது.

Also read: அன்போ, அடியோ பார்த்து கொடுக்கணும், திரும்ப ட்ரிபிள் மடங்கு கொடுப்பேன்.. அன்பு பயத்தை காட்டிய வாரிசு டிரைலர்

ஆனால் துணிவு அப்படி கிடையாது ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியும் சரவெடியாக இருந்தது. அதிலும் படத்தின் சில முக்கிய கதாபாத்திரங்கள் ட்ரெய்லரில் கூட இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் துணிவு படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே துணிவு படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் தற்போது பட குழு அந்த தேதியை லாக் செய்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அஜித் நவீன ரக துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும்படியாக போஸ்டர் இருக்கிறது. இதை பார்க்கும் போதே சபாஷ் சரியான போட்டி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. ஏனென்றால் வாரிசு முழு செண்டிமெண்ட் கலந்த கதை ஆகவும் துணிவு ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் படியும் இருக்கிறது. இதுவே உச்சகட்ட ஆவலை தூண்டி இருக்கிறது.

Also read: டிரெய்லரை வைத்து வசூலில் ஆட்டிப்படைக்க போகும் துணிவு.. அஜித்துக்கு முழு டான்ஸரான பிக் பாஸ் பிரபலம்

Trending News