வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

என்னை மாற்ற சொன்ன சீமான்.. உண்மையை ஒப்புக் கொண்ட ஹெச்.வினோத்

அஜித்தின் துணிவு படத்தை இயக்கியுள்ள ஹெச் வினோத் தற்போது பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேசும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. வினோத் துணிவு படத்தை பற்றி மட்டுமல்லாமல் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் மேடையில் பேசுகையில், வினோத் தனது இன்ஷியலை ஆங்கிலத்தில் போட்டு வந்தார். அதன் பின்பு தம்பியிடம் நான் முதலில் அதை தமிழில் மாற்றுங்கள் என கூறினேன். அதன் பிறகு தான் இப்போது எச் வினோத் என்ற தமிழில் போட ஆரம்பித்துள்ளார் என்று சீமான் கூறியிருந்தார்.

Also Read : விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

இது உண்மையா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. இதனால் நேரடியாக வினோத் இடமே இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வினோத், நானும் நண்பர் சரவணனும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சரவணனுக்கு சீமான் அண்ணனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் சீமான் அண்ணன் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது தான் வினோத் என்று ஆங்கிலத்தில் எழுதும்போது இன்ஷியலையும் ஆங்கிலத்தில் போடு. அதுவே உன் பெயரை தமிழில் எழுதும் போது தமிழில் தான் இன்ஷியல் போட வேண்டும் என்று தன்னிடம் உரிமையாக கேட்டுக் கொண்டார். அப்படி போட்டால் தனக்கான அங்கீகாரம் கிடைக்குமா என்ற பலரும் கேட்டார்கள்.

Also Read : அஜித் சார் கிட்ட இருந்து எல்லாரும் இந்த 3 விஷயத்தை கத்துக்கணும்.. பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட ஹெச்.வினோத்

ஆனால் சீமான் அண்ணன் உன் திறமைக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறினார். மேலும் சீமான் பொறுத்தவரையில் ஒரு அன்பான அண்ணன் என்று அவரைப் பற்றி புகழ்ந்து பல விஷயங்களை வினோத் கூறியிருந்தார். மேலும் சீமானால் தான் அவருடைய இன்ஷியலை வினோத் மாற்றி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் துணிவு படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் இதுவரை அஜித்தை பார்த்திடாத கதாபாத்திரத்தை வினோத் செதுக்கி உள்ளாராம். ஆகையால் வலிமையில் விட்டதை துணிவு படத்தின் மூலம் படக்குழுவினர் பெற உள்ளனர்.

Also Read : 100 கோடி செலவு பண்ணாலும் நாங்க தான் கெத்து.. இத மட்டும் செய்யாதீங்க என கோரிக்கை வைத்த வினோத்

Trending News