அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படம் ரிலீசானது. தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்ட இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாங்கான திரைப்படம் என்பதால் குடும்பத்துடன் ரசிகர்கள் வாரிசை கண்டுக் கழிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அப்பாவாக சரத்குமார், வில்லனாக பிரகாஷ் ராஜ், அண்ணன்களாக ஸ்ரீகாந்த், ஷாம் அண்ணியாக சங்கீதா, சம்யுக்தா, காதலியாக ராஷ்மிகா என பிரம்மாண்டமான வீட்டில் பெரிய குடும்பமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமனின் செண்டிமெண்ட் இசை வேற லெவலில் படம் முழுதும் வலம் வருகிறது.
இப்படி வாரிசு படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசப்பட்டாலும் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா கட்சிதமாக அக்கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார். இவருக்கென அம்மா பாடல் ஒன்று இசையிடப்பட்டு பாடகி சித்ராவின் குரலில் கேட்கும்போது மெய்சிலிர்க்க வைத்தது. நடிகை ஜெயசுதா 1976 ஆம் ஆண்டிலிருந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
தற்போது அம்மா கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களான ராமச்சரன், மகேஷ் பாபு உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். முதன் முறையாக விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயயசுதா தற்போது ரகசியமாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபாடு காட்டி வரும் ஜெயசுதா, முதலில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து பெற்றார்.பின்னர் இரண்டாவதாக நிதின் கபூர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவரும் சில ஆண்டுகளுக்கு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.
இதனிடையே தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை மறைக்க திரைத்துறையில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜெயசுதா, தற்போது மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் ரகசியமாக நடந்துள்ளதால் ஜெயசுதாவின் கணவர் யார் என்பது தெரியாமல் உள்ளது.