செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகேஷ்பாபுவை அட்ட காப்பியடித்த விஜய்.. வம்சியை இங்க மட்டும் இல்ல அங்கயும் வச்சு செய்றாங்களாம்

தமிழ்நாட்டில் விஜய் படம் என்றாலே பெரிய மாஸாக ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் தெலுங்கில் வாரிசூடு என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த படம் வெளியான முதல் இரண்டு நாளில் பெரிய அளவில் வசூலை வாரி வழங்கியது. பின்பு இந்த படத்திற்கான வசூல் தலைகீழாக மாறியது. இதற்கு காரணம் இப்பொழுது அந்த படத்திற்கான விமர்சனங்கள் வெளியானதே ஆகும்.

Also read: தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

வாரிசு படத்தை போலவே அங்குள்ள ரசிகர்களுக்கு வாரிசூடு படத்தில் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வந்தது. அவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் தான் முடிந்தது என்று கூறுகின்றனர்.

இதே நேரத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி படம் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் சக்கை போடு போட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. விஜயுடன் போட்டி போட்டு இவர்கள் படம் திரைக்கு வந்த போது அனைத்து விதமான ரசிகர்களும் வாரிசுடு படத்திற்கு மட்டும்தான் சப்போட்டாக இருந்து வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

Also read: மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? வம்சியை வம்பிழுத்த ப்ளூ சட்டைமாறன்

இப்படத்தில் வரும் எல்லா காட்சிகளும் மகேஷ் பாபு படத்தில் இருந்து எடுத்து நடித்தது போல் இருந்திருக்கிறதாம். அதுமட்டுமின்றி அவர்கள் போட்ட மியூசிக் ஒன்றும் புதிதாக இல்லை. பழைய மசாலாவை தான் சேர்த்து இருக்கிறார் என்று கூறுகின்றனர். இப்படத்தை பார்த்து விட்டு அங்குள்ள மக்கள் வாரிசூடு படம் இங்கே எடுபடவில்லை என்று கூறுகின்றனர்.

என்னதான் இவர் அஜித் கூட போட்டி போட்டு வந்தாலும் தெலுங்கு நடிகர்களோட இவரு தோற்றுப் போய் தான் நிக்கிறாரு. இதற்கு காரணம் இவர் தேர்ந்தெடுத்த இயக்குனர். ஏனென்றால் இந்த இயக்குனர் தெலுங்கு பட பாணியில் கதைகளத்தை எடுத்துள்ளது தான் இதற்கு காரணம்.

Also read: விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்.. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் தான்

Trending News