வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தெய்வீக காதலா.? ஏண்டா எங்கள சாவடிக்கிறீங்க! பைத்தியமாக்கும் பாரதிகண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பாகம் நிறைவடைந்து சீக்கிரம் இரண்டாம் பாகம் துவங்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அது இந்த ஜென்மத்தில் நடக்காது போல் தெரிகிறது.

ஏனென்றால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் இரு குழந்தைகள் மூலம் சீக்கிரம் சேர்ந்து விடுவார்கள் அத்துடன் சீரியலும் நிறைவு பெற்றுவிடும் என சின்னத்திரை ரசிகர்கள் கணித்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக கண்ணம்மாவிற்காக பாண்டி உடன் சண்டை போட்ட பாரதி தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read: மதத்தை வைத்து அசிங்கப்படுத்திடீங்க .. கொந்தளித்த பிக் பாஸ் நடிகை

ஆனால் சிகிச்சை முடிவில் அவர் பழைய நினைவுகளை எல்லாம் இழந்தது போல் சீரியலில் காட்டுகின்றனர். ஆனால் ‘கண்ணம்மா, கண்ணம்மா’ என்று தன்னுடைய மனைவி பெயரை மட்டும் புலம்பி கொண்டிருக்கும் பாரதியை பார்த்த குடும்பத்தினர் சந்தோஷத்தில் திளைக்கின்றனர்.

பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் தெய்வீக காதலால் அவருடைய ஞாபகம் மட்டும் பாரதிக்கு இன்னமும் இருக்கிறது. நடந்ததை எல்லாம் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு தெரியப்படுத்தி அவர் மூலம் இழந்த நினைவுகளை எல்லாம் பாரதிக்கு கொண்டு வர பார்க்கிறார்.

Also Read: அள்ள அள்ள குறையாத கஜானா, தொட்டதெல்லாம் பொன்னாகுது.. பல்லாயிரம் கோடி முதலீட்டில் உதயநிதி

பாரதிக்கு கண்ணம்மாவை தெரியும் என சொல்வார் என்று எல்லோரும் நினைத்தபோது, அதற்கு மாறாக கண்ணம்மாவையே பாரதி யார் என கேட்டுவிட்டார். இது யாரும் எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட் ஆக இருந்தது. இதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது தெய்வீக காதல் என சொல்லி பார்க்கும் சின்னத்திரை ரசிகர்களை எல்லாம் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார் பாரதிகண்ணம்மா சீரியலின் இயக்குனர் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கின்றனர்.

Also Read: பண மூட்ட கதிருக்கு பணப்பெட்டி யாருக்கு? மீண்டும் காசு மழை கொட்டும் பிக் பாஸ் வீடு

Trending News