புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நீங்கதான் அடிச்சிக்கிட்டு சாவுரிங்க.. ஒன்றாக அமெரிக்கா செல்லும் அஜித், விஜய், பரபரப்பை கிளப்பிய கங்கை அமரன்

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் படங்களை தவிர வேறு யாருடைய படங்கள் வந்தாலும் சத்தமில்லாமல் ரிலீசாகி வெற்றியோ, தோல்வியோ அடையும்.ஆனால் அஜித், விஜய் நடிக்கும் படங்களை காட்டிலும் இவர்களின் தல, தளபதி என்ற பெயருக்கே திரையில் தீ பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் விஜய் பெருசா, அஜித் பெருசா என சமூகவலைத்தளத்திலோ,பொதுவெளியிலோ அடித்துக்கொள்வர்.

அண்மையில் வாரிசு, துணிவு படங்கள் ஒரே நாளில் ரிலீசானதையொட்டி திரையரங்குகளில் தல, தளபதி ரசிகர்கள் மண்ணில் புரண்டு அடித்துக்கொண்டும், வாயில் வரும் கொச்சை வார்த்தைகளையெல்லாம் பேசியும் சர்ச்சையை கிளப்பினர். ஒரு படிக்கு மேல் அஜித் ரசிகரான 19 வயது இளைஞன் ஒருவர் லாரியில் இருந்து கீழே விருந்து உயிரிழந்தார்.

Also Read: ரஜினி காலில் விழும் எஸ் ஏ சி.. விஜய் தனது அப்பாவை வெறுக்க இப்படி ஒரு காரணமா.!

இப்படியெல்லாம் உயிர் போகும் அளவிற்கு, அவர்களை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்ற பெயரில் எப்போது பார்த்தாலும் சண்டை, தகராறு, பிரச்சனை என தங்களது வாழ்க்கையையே மறந்து சில ரசிகர்கள் உள்ளனர். இவர்களை தடுக்கும் வகையில் விஜயும், அஜித்தும் என்னதான் அறிவுரை வழங்கினாலும் இதுபோன்ற விஷயங்கள் வளர்ந்து கொண்டுதான் போகிறது.

இதனிடையே பிரபல இயக்குனரான வெங்கட் பிரபுவின் தந்தையும், இயக்குனருமான கங்கை அமரன் அண்மையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அதில் விஜய், அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்க ஆயத்தமாகி வருவதாகவும், கதை எழுத்து பனி நடைபெற்று வருவதாகவும் வழக்கம் போல் ஒரு விவாதத்தை முன் வைத்தார். பின்னர் பேசிய அவர், விஜயும், அஜித்தும் அவர்களது வாரிசு, துணிவு படங்கள் ரிலீசான உடன் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

Also Read: படை பலத்தை பெருக்கும் தில்ராஜ்.. செஞ்சதெல்லாம் போதும்னு கம்முனு வேடிக்கை பார்க்கும் விஜய்

தற்போது மறுபடியும் அங்கிருந்து அமெரிக்கா செல்ல இருவரும் பிளான் செய்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள அஜித், விஜய் ரசிகர்கள் தல பெருசா, தளபதி பெருசா என அடித்துக்கொண்டு சாகுகிறார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு என கொந்தளித்தார். மேலும் பேசிய அவர் அவர்கள் இருவரும் எப்போதும் நண்பர்களாக தான் உள்ளனர். ஜாலியாக படங்களில் நடித்து விட்டு 100 கோடிக்கு மேல் சம்பளங்களை வாங்கிவிட்டு வாழ்கிறார்கள் என கங்கை அமரன் தெரிவித்தார்.

கங்கை அமரன் தனது ஆதங்கத்தை தெரிவித்து வருவது போன்று பல பிரபலங்கள் தாங்கள் பேசும் இடங்களில் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் கூட, தனது ட்விட் பக்கத்தில் தல,தளபதி சண்டை வேண்டாம் என அட்வைஸ் செய்தார். ஆனால் இதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இன்றைய இளைஞர்கள் இல்லை என்பது தான் உண்மை.

Also Read: விஜய்யை பார்த்தால் எரிச்சலாக இருக்கு.. கங்கை அமரன் சொல்லும் காரணம் என்ன தெரியுமா.?

Trending News