புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதில் டைட்டில் வின்னராக அசீம், ரன்னரப்பாக விக்ரமன், இரண்டாவது ரன்னரப்பாக ஷிவின் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸில் இறுதிவரை பயணித்த இவர்களின் சம்பள விபரத்தை தற்போது பார்க்கலாம்.

தனித்துவமான திறமைகள் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் ஷிவின். அவற்றையும் முன்னோக்கு பார்வையுடனும் சாதுரியமாகவும் விளையாடக்கூடிய இவருக்கு பிக் பாஸ் மூலமாக ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். திருநங்கை சமூகத்திற்கு இவர் மூலம் மரியாதை கிடைத்துள்ளது.

Also Read : விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

ஷிவினுக்கு பிக் பாஸில் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 105 நாட்கள் ஷிவின் பயணித்துள்ளார். ஆகையால் தோராயமாக 21 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிக் பாஸ் மூலம் ஷிவினுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

இவரைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல்வாதியான விக்ரமன் பிக் பாஸ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை பெறவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருக்கிறது. விக்ரமனுக்கு பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 18000 சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

அதன்படி 18 லட்சத்திற்கும் அதிகமாக விக்ரமனுக்கு பிக் பாஸ் சம்பளம் கொடுத்துள்ளது. கடைசியாக பிக் பாஸ் டைட்டில் வின்னரான அசீமுக்கு தான் பிக் பாஸில் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அசீம் சம்பளம் பெறுகிறார்.

இதை வைத்து கணக்கிட்டு பார்த்தால் 23 லட்சத்திற்கும் அதிகமாக அசீம் சம்பளம் பெற்றுள்ளார். இது தவிர பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் பெற்றுள்ளதால் 50 லட்சம் அவருக்கு கிடைத்துள்ளது. ஆகையால் மொத்தமாக 73 லட்சம் வரை அசீம் பிக் பாஸில் சம்பளம் பெற்றுள்ளார். இவ்வாறு ஃபைனலிஸ்டுக்கு பிக் பாஸ் வாரி வழங்கி உள்ளார்.

Also Read : விஜய் டிவிக்கு டாட்டா காட்டிவிட்டு ஜீ தமிழுக்கு கிளம்பிய பாக்கியலட்சுமியின் முக்கிய பிரபலம்.. இவங்கதானே சீரியலின் ஆணிவேரே

Trending News