புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரிஸ்கெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி.. ஆடியன்ஸ் பல்ஸை பிடிக்க தளபதி 67-ல் லோகேஷ் எடுக்கும் சிரமம்

கோலிவுட்டில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற சில படங்களை மட்டுமே இயக்கினாலும் எடுத்த படம் எல்லாம் சூப்பர் ஹிட் என்ற காரணத்தினால் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது லோகேஷ் விஜய்யின் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பை துவங்கி உள்ளார். இதனால் ஒவ்வொரு நாளும் இந்தப் படத்தை குறித்த புதுப்புது அப்டேட் வெளியாகி கொண்டிருக்கிறது. அதிலும் லோகேஷ் தளபதி 67 படத்திற்காக பெரிய ரிஸ்க் எடுக்கிறார்.

Also Read: அப்ப புரியல, இப்ப புரியுது.. யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

இப்பொழுது பெரும்பாலும் அவர் எல்சியூ எனப்படும் கதைகளையே குறி வைக்கிறார். அதாவது ஒரு படத்திலிருந்து அடுத்த படத்திற்கு தொடர்புடைய காட்சிகளை எடுப்பது தான் எல்சியு. ஒரு படத்தில் நடித்த ஹீரோக்களை வைத்து அடுத்த படத்திற்கு தொடர்புடைய காட்சிகளை எடுக்கும் சென்டிமென்ட் எப்பொழுதுமே லோகேஷ்க்கு பிடிக்கும்.

அதேபோல் பெரும்பாலும் நைட் ஷூட்டிங் தான் செய்கிறார் லோகேஷ். இவர் கதைகளும் இரவு நேரம் சம்பந்தமாகவே வரும். நைட் எடுப்பது மிகவும் சிரமம். ஆனால் இவர் சென்டிமென்டாக நைட் எடுத்தால் படம் சக்சஸ் என்கிறார். பகலில் ஷூட்டிங் நடத்துவதை விட இரவில் ஷூட்டிங் நடத்துவது கொஞ்சம் ரிஸ்க்.

Also Read: திரிஷாவை ஓரம்கட்ட வரும் ஏஜென்ட்.. தளபதி 67 மிரட்டும் கதாபாத்திரம்

ஆனால் ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாட்டோம். ஆடியன்ஸ் பல்ஸை பிடிக்க நைட் ஷூட் தான் சரியான தேர்வு. ஏனென்றால் கைதி, விக்ரம் போன்ற படங்களில் முக்கியமான காட்சிகள் எல்லாம் இரவில் தான் லோகேஷ் படமாக்கி, அந்தக் காட்சியை பார்ப்போரை உறைய வைத்திருந்தார்.

அதேபோல் தளபதி 67 படத்திலும் பெரும்பாலான காட்சிகள் இரவில் தான் எடுக்க உள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் படகுழு விமானத்தில் இருக்கும் படியான வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இன்று படத்தின் டைட்டிலும் வெளியாக உள்ளது.

Also Read: விக்ரமை விட வசூலை ஜாஸ்தியாக லோகேஷ் படும் பாடு.. தளபதி 67 செய்யப்போகும் சம்பவம்

Trending News