இயக்குனர் விக்னேஷ் சிவன் அண்மையில் ஏகே62 படத்திலிருந்து விலக்கப்பட்டதையடுத்து, அப்படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி இன்னும் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதிலிருந்து, இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, மகிழ் திருமேணி என லிஸ்ட் நீண்டுக் கொண்டுதான் போகிறது. இது ஒருபுறம் இருக்க ஏன் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என்ற கேள்வி உலா வந்த வண்ணம் உள்ளது.
அஜித்துக்கு கதை பிடிக்கவில்லை என்றும், விக்னேஷ் சிவனின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியானாலும், உண்மையில் என்னதான் ஆனது என யாருமறியாத ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு நடிகையும், விக்னேஷ் சிவனின் மனைவியுமான நயன்தாரா தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read: மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி
விக்னேஷ் சிவன், நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தது முதல் இன்று திருமணமாகி, வாடகை தாய் மூலம் பிள்ளைகள் பெற்றது வரை நயன்தாராவின் சிபாரிசில் தான் அவர் ஒவ்வொரு படங்களையும் இயக்கி வருகிறார். அதே போல தான் அஜித்தின் ஏகே62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனை பரிந்துரைத்தார் நயன்தாரா. ஆனால் தற்போது அவரே, விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டதற்கு முக்கியமான காரணமாக விளங்குவது தான் ஆச்சரியமாக உள்ளது.
திருமணமான பின்பு பல நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் என்பது குறையத்தான் செய்யும். இதில் நயன்தாரா மட்டும் விதிவிலக்கா என்பது போல, இவருக்கும் தொடர் பட வாய்ப்புகள் அண்மையில் குறைந்து தான் வருகிறது. இந்நிலையில் திருமணமான நயன்தாரா, அஜித் போன்ற முன்னணி நடிகரின் படங்களில் நடித்தால் கட்டாயம் நயன்தாராவின் மார்க்கெட்டுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என ஸ்கெட்ச் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
Also Read: விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு
இதன் காரணமாக நயன்தாராவை ஏகே62 படத்தில் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன், அவ்வப்போது தயாரிப்பு நிறுவனமான லைகாவிடமும், அஜித்திடமும் கூறிக்கொண்டே வந்துள்ளார். ஆனால் விக்னேஷ் சிவனின் பேச்சுக்கு மாறாக திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நடிகைகளை லைக்கா நிறுவனம் தேர்வு செய்தது. ஆனால் அவர்களை எல்லாம் ரிஜெக்ட் செய்தார் விக்னேஷ் சிவன்.
ஒருகட்டத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃபை அணுகி அவருக்கு 15 கோடி வரை சம்பளம் பேசிய நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பெயரை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். இதனால் கடுப்பான அஜித், விக்னேஷ் சிவனை இப்படத்திலிருந்து விலக்கியதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் நயன்தாராவின் மார்க்கெட்டுக்காக பரிந்துரைத்து பேசி, தற்போது அவருக்கே மார்க்கெட் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
Also Read:விஜய்க்கு ஒரு நியாயம், அஜித்துக்கு ஒரு நியாயமா?. ஏகே 62 படத்திற்கு மீண்டும் உருவாகும் பிரச்சனை