வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அண்ணன் தம்பிக்குள் வரப்போகும் சண்டை.. ஏகப்பட்ட திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது பல்வேறு சுவாரசியங்களுடன் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய சம்பவமும் பரபரப்பும் குறையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் அனைவருடைய ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றாகவும் உள்ளது.  இந்த சீரியல் ஆனது ரசிகர்களின் பேர் ஆதர்வுடன் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

தற்பொழுது குணசேகரன் குடும்பத்தில் ஆதிரையின் கல்யாண விஷயம் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சம்பவமானது அண்ணன் தம்பிகளுக்குள்ளே பெரும் பிரச்சனையை கிளப்பியுள்ளது. குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு மட்டுமே குடும்பத்தில் பேசுவதற்கும் முடிவை எடுப்பதற்கும் உரிமை உள்ளது. குடும்பத்தில் உள்ள பெண்களை அடிமைகளாக மட்டுமே வைத்துள்ளனர்.

Also Read: டிஆர்பி-யில் முதல் மூன்று இடத்தை பிடித்த சேனல்கள்.. விஜய் டிவி-கே தண்ணி காட்டிய பிரபல டிவி

அதிலும் குணசேகரன் மட்டுமே குடும்பத்தில் உள்ள அனைவருடைய வாழ்க்கைக்கும் தேவையானவற்றை தீர்மானிக்க உரிமை உள்ளது போல தனது அகங்காரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆதிரை விரும்புவது தனது பரம எதிரியான எஸ் கே ஆர் இன் தம்பி என்பதனால் இவர்களின் திருமணத்திற்கு இடையூறாக இருந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்களை தவிர, குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கரிகாலன் உடன் ஆதிரையை திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை. இதனால் வீட்டில் உள்ள மருமகள்கள் எப்படியாவது அருண் உடன் ஆதிரைக்கு திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். மேலும் குணசேகரனால் ஆதிரைக்கு பிடிக்காத ஒரு வாழ்க்கை அமைந்து விடக்கூடாது என்று தங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி வருகின்றனர். 

Also Read: முதல் மரியாதை ராதாவாக மாறிய கருப்பழகி.. சன் டிவி நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

ஆனால் அதற்கெல்லாம் பிடி கொடுத்து பேசாமல் இருந்து வருகிறார். வீட்டில் உள்ள மருமகள்களையும் மற்றவர்களையும் பார்த்து அடிமையாக உள்ளவர்கள் எதுவும் பேசக்கூடாது எனவும், நான் எடுப்பதுதான் முடிவு என்பது போல் பேசி வருகிறார். தற்பொழுது குடும்பத்தில் உள்ள மருமகள்களை குணசேகரன் வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டி வருகிறார். 

அதுவும் அவர்கள் கணவர்கள் கண்முன்னே அவமானப்படுத்தி வருகிறார். இதனால் அண்ணன் இப்படி நமது மனைவிகளை திட்டுகிறாரே என்று கதிர் மற்றும் ஞானம் இருவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். வெகு விரைவிலேயே உயிராய் இருக்கக் கூடிய அண்ணன் தம்பிகள் மத்தியில் விரிசல் ஏற்பட உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையை குணசேகரன் எவ்வாறு சமாளிக்க போகிறார் என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read: சீரியலில் பட்டையை கிளப்பும் சினிமா இயக்குனர்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

Trending News