முந்தைய காலத்தில் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அதை வெளிக்கொண்டு வருவதற்கும் மற்றும் மக்களிடம் சேர்ப்பதற்கும் பெரிய குதிரைக்கொம்பாக தான் காலங்கள் இருந்தது. ஆனால் சமீப காலமாகவே இது முற்றிலும் மாறுபட்டதாக மாறி உள்ளது. அதாவது சினிமாவில் நுழைவதற்கு திறமைகள் மட்டும் இருந்தால் போதும் என்று நிரூபித்து வருகிறது.
அந்த வகையில் சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று மிகவும் பிரபலமாகிறார்கள். அதில் பல கதாநாயகர்கள், நடிகைகள் மற்றும் பலபேர் தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் யூடியூப் மூலமாகவும் திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் சுலபமாக நுழைந்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் மைக் செட் ஸ்ரீராம்.
இவர் யூடியூப் மூலமாக ஏராளமான நகைச்சுவையான வீடியோக்களை வெளியிடுவார். அதன் மூலம் இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சில பாடல்கள் மூலம் வெள்ளித்திரை ரசிகர்களுக்கும் அறிமுகம் ஆகிவிட்டார். சில அவார்டு ஃபங்ஷன்லையும் கலந்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்திற்கு கடந்த ஆண்டு பூஜை போடப்பட்டது. இதனை அடுத்து நேற்று மைக் செட் ஸ்ரீராமின் பிறந்தநாளுக்கு இந்த படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் படத்தை சந்தானத்தின் மைத்துனர் வினோத் என்பவர் இவரின் பினாமியாக தயாரிக்கிறார். ஏனென்றால் இவருக்கு இருக்கும் கடன் தொல்லையால் இப்பொழுது பினாமியாக மாறிவிட்டார்.
Also read: சமீபத்தில் சந்தானம் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. சிரிப்பே வரவழைக்காத காமெடி மூவிஸ்
மேலும் இந்த படத்தை விவேக் இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மானசா கிருஷ்ணன் மற்றும் ரீமி என இரண்டு புது முக நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். இவர்களுடன் ஆதித்யா டிவி சேனலின் மூலம் மிகவும் பிரபலமான கதிர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
இந்தப் படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் நிறைந்த படமாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் கூடிய விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக இருக்கிறது. இதிலிருந்து இப்பொழுது முக்கியமாக தெரிவது அழகு தேவையில்லை திறமை இருந்தால் சினிமாவில் வெற்றி பெறலாம் என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு.
Also read: தயாரிப்பாளர்களை கதறவிடும் சந்தானத்தின் வசூல் சாதனை.. அடி மட்டத்திற்கு சென்ற வியாபாரம்