தனுஷ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வாத்தி திரைப்படம் திரையரங்கில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனுஷின் புதிய வீட்டின் புகைப்படத்தை இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் தனுஷ் தன்னுடைய பெற்றோருடன் இணைந்து நிற்கிறார். இதில் சுப்பிரமணியம் சிவா நடிகர் தனுஷை பற்றி ஒரு சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். தனுஷின் புதிய வீடு இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவிற்கு கோயிலுக்குள் இருக்கும் உணர்வை கொடுத்ததாம்.
வாழும் போதே தன்னுடைய தாய் தந்தையை சொர்க்கத்தில் வாழவைக்கும் தனுஷ் போன்ற பிள்ளைகள் தெய்வமாக உணரப்படுகிறார்கள். மேலும் தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாகவும் உதாரணமாகவும் தனுஷ் உயர்ந்து நிற்பதாகவும் இந்த புகைப்படங்களுடன் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா கருத்து பதிவிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே தனுஷ் இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் திருடா திருடி, சீடன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போதிலிருந்து இப்போது வரை தனுஷின் ஒவ்வொரு வீட்டு விசேஷத்திற்கும் நட்பு ரீதியாக இயக்குனர் சுப்ரமணியம் சிவா கலந்து கொள்கிறார். விரைவில் இவர்களது கூட்டணியில் ஒரு படம் உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி செம டிரெண்டானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
தாய் தந்தையரை சொர்க்கத்தில் வாழ வைக்கும் தனுஷ்
