சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

தில்லானா மோகனாம்பாள் போல் வெற்றி கண்ட இளையராஜா .. 9 பாடலுக்காகவே வெள்ளிவிழா கண்ட படம்

அந்தக் காலத்தில் இருந்து இப்பொழுது வரை தனது இசையின் ஞானத்தால் மக்கள் அனைவரையும் கட்டி போட்ட ஒரே ராஜா நம்முடைய இசைஞானி இளையராஜா தான். உலகின் எல்லை வரை இவரது இசையை ஒலிக்க செய்தவர். இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து மிகவும் பெருமைக்குரியவர்.

அப்படிப்பட்ட இவர், தம்பிக்காக ஒரு படத்தில் கதையே கேட்காமல் பாட்டு எழுதிக் கொடுத்து அந்தப் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அந்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை கேட்டு ரசிக்கும் படியாக இருக்கிறது. அதாவது கங்கை அமரன் 19 படங்களை இயக்கியிருக்கிறார். அதில் 17 படங்களுக்கும் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார்.

Also read: வாழ வைத்த தெய்வங்களை வாட்டி வதைக்க முடிவு எடுத்து இருக்கிறாரா ரஜினி.. இளையராஜா போல் மாறிய சூப்பர் ஸ்டார்

அதில் கங்கை அமரன் இயக்கி மிகவும் வெற்றியடைந்த ஒரு படம் தான் கரகாட்டக்காரன். இந்தப் படம் 1989 ஆம் ஆண்டு ராமராஜன், கனகா, சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தை கங்கை அமரன் இயக்குவதற்காக இளையராஜாரிடம் நான் கரகாட்டக்காரன் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு இளையராஜா அது என்ன படம் அந்த மாதிரி பெயர் வைத்தால் ஓடுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன் நீங்கள் அந்த படத்திற்கு பாட்டு மட்டும் எனக்கு ரெடி பண்ணி கொடுங்க என்று கேட்டிருக்கிறார். இளையராஜாவும் கதையே கேட்காமல் 9 பாட்டுகள் ரெடி பண்ணி கொடுத்து இருக்கிறார்.

Also read: கவிஞர் வாலியின் தவறை சுட்டிக்காட்டிய கங்கை அமரன்.. மோதல் முற்றியதால் ஏற்பட்ட விளைவு

அப்படி கொடுத்த ஒன்பது பாட்டுகளுமே இன்றுவரை கேட்கும்போதெல்லாம் நம்மளை மெய்மறக்க செய்கிறது. அந்த அளவிற்கு இந்த பாடல்கள் அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்தப் படத்தின் பாடலுக்காகவே இதற்கு வெற்றி விழா கிடைத்தது. அதிலும் முக்கியமாக சொல்லக்கூடியது அந்த காலத்தில் ஒவ்வொரு பாடலும் 6 நிமிடங்கள் இருக்கும். அப்படி பார்த்தா 9 பாடல்களும் சேர்ந்து 54 நிமிடங்கள் ஆகும் பாட்டுக்கு மட்டுமே.

இதில் செந்தில் கவுண்டமணி நகைச்சுவை மட்டும் 30 நிமிடங்களுக்கும் மேல் இருக்கும். மீதி இருக்கிற ஒரு மணி நேரத்தில் அழகாக கதையை சொல்லி திரைக்கதை அமைத்தது கங்கை அமரனின் பெரிய சாமர்த்தியம் என்றே சொல்லலாம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எப்படி தில்லானா மோகனாம்பாள் படம் மூலமாக வெற்றி கிடைத்ததோ அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு இந்த கரகாட்டக்காரன் படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. இந்த மாதிரி படங்களை கொடுத்து தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்த படங்களில் ஒன்று கரகாட்டக்காரன்.

Also read: நம்ம கரகாட்டக்காரன் கனகாவா இது? என்ன இப்படி ஆயிட்டாங்க.. அதிர்ச்சியாக்கிய புகைப்படம்

- Advertisement -spot_img

Trending News