புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குணசேகரனின் மூக்கை உடைத்த சக்தி.. சல்லி சல்லியாக உடையும் எதிர்நீச்சல் குடும்பம்

சன் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் ஆன எதிர்நீச்சல் சீரியல் ஆனது ரசிகர்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் குடும்பத்தில் உள்ள பெண்கள் குணசேகரனை இவரெல்லாம் ஒரு மனிதரா என்பது போல் திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து குணசேகரன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருந்து வருகிறார். அதிலும் நாளுக்கு நாள் இவருடைய கொட்டமானது அதிகரித்த வண்ணம் உள்ளது. இவர் எப்பொழுதுமே அநீதிக்கு மட்டுமே சாதகமாக பேசி வரக்கூடியவர். குடும்பத்தில் உள்ளவர்கள் அதில் உள்ள நியாயத்தை எடுத்துச் சொன்னாலும் கூட அதனை காதில் வாங்காமல் தான் பேசுவது தான் சரி என்ற என்ற அகந்தையில் இருக்கக்கூடியவர்.

Also Read: குணசேகரன் ஆட்டத்தில் விழப்போகும் விரிசல்.. பரபரப்பான எதிர்நீச்சல்

அதிலும் தான் என்ற அகங்காரத்தில் இருந்து வரும் இவரின் உண்மை முகமானது தற்பொழுது ஞானசேகரனுக்கு புரிந்துள்ளது. இதுவரையிலும் இவருக்கு தூணாக இருந்து வந்த உடன் பிறந்த சகோதரர் என்றும் கூட பார்க்காமல் தனது வார்த்தைகளால் புண்படுத்தியுள்ளார். இதனால் மணமடைந்த ஞானசேகரன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினையை எடுத்துள்ளார்.

மேலும் குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் உடன்பிறந்த தம்பிகளுடைய சுதந்திரத்திற்கே முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அண்ணனைப் பற்றிய மனநிலையை புரிந்து கொண்ட சக்தி அதிலிருந்து வெளியே வந்து விட்ட நிலையில் இப்பொழுது தான் ஞானசேகரனுக்கு புத்தி வந்துள்ளது. குடும்பத்தில் பெரும் பூகம்பமே வெடித்துள்ள நிலையில் ரேணுகாவின் மனக்குமுறல் ஆனது இப்பொழுது தான் ஞானத்திற்கு புரிந்துள்ளது.

Also Read: டிஆர்பியில் அடித்து துவம்சம் பண்ணும் எதிர்நீச்சல்.. இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக இருக்கும் பிரபலங்கள்

தற்பொழுது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே கட்சியில் இணைந்துள்ள நிலையில் கதிர் மட்டுமே தனது அண்ணனுக்கு சாதகமாக இருந்து வருகிறார். இதிலிருந்து தனக்கு சாதகமாக பேசி வருபவர்களை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. குடும்பத்தில் உள்ள பெண்களாகட்டும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆகட்டும் நியாயத்தைப் பற்றி பேசினால் ஒரேடியாக தனது வார்த்தையால் மட்டம் தட்டி விடுகிறார்.

இந்நிலையில் சக்தியின் பெண்களை மதிக்கக் வேண்டும் என்ற குணத்தினை ஞானசேகரனுக்கு புரிய வைத்துள்ளார். மேலும் குணசேகரனின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பெரும் சம்பவமானது அரங்கேறி உள்ளது. சக்தி இவ்வாறு தனது அண்ணனை எதிர்த்து பெயர் சொல்லி பேசியிருப்பது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதனை மனதில் வைத்துக் கொண்டு குணசேகரன், சக்திக்கு எதிராக என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: குணசேகரனின் கொட்டத்தை அடக்க போகும் சக்தி.. சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

Trending News