சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்தியளவில் ராஜமௌலி மனதை வென்ற 5 படங்கள்.. தனுஷின் வெற்றி இயக்குனருக்கு கிடைத்த புகழாரம்

தெலுங்கு திரை உலகின் மிக பிரம்மாண்டமான இயக்குனராக இருக்கும் ராஜமௌலி படமான பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மூலம் உலக அளவில் கவனத்தைத் ஈர்த்துவிட்டார். தமிழில் கூட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர் மனதில் ஐந்து படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் இவர் நியூயார்க்கர் இதழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் இவருக்கு இந்தியளவில் அதிகமாக கவர்ந்த படம் என்று ஐந்து படங்களை பரிந்துரைத்து பட்டியலிட்டு இருக்கிறார். மேலும் அந்த படம் கண்டிப்பாக எல்லாரும் பார்க்க வேண்டிய படம் என்றும் அதற்கான முக்கியத்துவத்தை பற்றி அழகாக பேட்டி அளித்திருக்கிறார்.

Also read: பிரம்மாண்டத்தில் ராஜமௌலி,ஷங்கரையே ஓரங்கட்டிய தில் ராஜ்.. தலை சுற்ற வைக்கும் வாரிசு படத்தின் வீட்டு பட்ஜெட்

அவர் பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் தமிழ் படம் ஒன்று இடம் பிடித்திருக்கிறது. அந்தப்படம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படம். இப்படம் சேவல் சண்டை காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இந்த படத்தின் மூலம் வெற்றிமாறன் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உட்பட ஆறு விருதுகளை வென்றது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் வெற்றிமாறன் மற்றும் தனுஷிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

Also read: ரஜினியின் கோட்டைக்குள் வெற்றிக்கொடி நாட்டிய ராஜமௌலி.. வசூலை வாரி தந்த படம்

இப்பொழுது இந்த படத்தை பற்றி பிரம்மாண்டமான இயக்குனர் பரிந்துரைப்பது வெற்றிமாறனுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இதன் மூலம் மேலும் மேலும் அவர் படங்களை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் அவருக்கு அவர் அடுத்த படங்களில் முன்னேறுவதற்கு ஒரு ஊக்கமாக இது அமைந்திருக்கும்.

மேலும் இப்பொழுது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வெளிவர இருக்கும் விடுதலை திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படமும் வெற்றி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு தான் இவர் கதையை இயக்கி இருப்பார். இப்படம் அடுத்த மாதம் வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

Also read: விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய ராஜமௌலி.. இந்தப் பாராட்டு அஜித்துக்கு மட்டும்தான்

Trending News