புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எக்ஸ் பொண்டாட்டியால் வயிற்றெரிச்சலில் கோபி.. டிஆர்பிக்காக மீண்டும் சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் சில மாதங்களாக மந்தமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது பாக்யா குடும்பத்தின் எதிர்ப்பை மீறி எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் அவரின் மகள் நிலா எல்லோரிடமும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கோபி தன் வீட்டுக்கான மொத்த பணத்தையும் பாக்யாவிடம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கெடு கொடுத்துள்ளார். இதற்காக இரவு பகல் பார்க்காமல் பாக்யா சமையல் ஆர்டரை எடுத்து பணம் சம்பாதித்து வருகிறார். சமீபத்தில் வீட்டு செலவுக்காக கோபி கஷ்டப்பட்டு வந்தார்.

Also Read : ஜீ தமிழின் 2 கதாநாயகிகளை தட்டி தூக்கி விஜய் டிவி.. ராதிகா, எஸ்ஏசி இணைந்த புது சீரியலின் டைட்டில்

அப்போது பாக்யா தான் சம்பாதித்த ரெண்டு லட்சம் பணத்தை வீட்டின் தவணை ஆக கொடுத்து கோபியை வாய் அடக்கச் செய்தார். இப்போது கோபியின் மனைவி ராதிகாவின் ஆபீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அங்கு சமைபவர் நன்றாக சமைக்க வில்லை என வேறு ஒருவருக்கு ஆடார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக இன்று சிக்கரமே ஆபீஸ்க்கு போக வேண்டும் என்று கோபியிடம் பேசி வருகிறார். அப்போது முதலில் பாக்யாவை நான் தான் வேண்டாம் என்று சொன்னேன், அதற்காக இப்போது ஆபீஸில் திட்டுவதாக கோபியிடம் ராதிகா கூறுகிறார். பாக்யா அப்படியே கிழிச்சிடுவா என எக்ஸ் பொண்டாட்டியை கண்டபடி பேசுகிறார் கோபி.

Also Read : விஜய் டிவியின் குத்துவிளக்கு பிரியங்காவா இது.? மாலத்தீவில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட வைரல் வீடியோ!

ராதிகா ஆபீஸ்க்கு போகும்போது பாக்யா மீண்டும் இந்த சமையல் ஆர்டர் எடுக்க வருகிறார். மேலும் அந்த ஆர்டர் அவருக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் பாக்யாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதால் ராதிகா ஆங்கிலத்திலேயே கேள்விகளை கேட்கிறார். பதில் சொல்ல முடியாமல் பாக்யா திக்கு முக்காடுகிறார்.

பொறுத்தது போதும் என பொங்கியெழுந்த பாக்யா பிறக்கும்போதே எல்லோரும் எல்லாம் தெரிஞ்சுகிட்ட பிறக்கிறது இல்ல. எப்போ தேவை வரும்போது அப்பதான் கத்துப்பாங்க. நானும் தேவைப்படும்போது கத்துப்பேன் என்று ராதிகாவுக்கு சவுக்கடி கொடுக்கிறார். இவ்வாறு பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பதால் மீண்டும் டிஆர்பி சூடு பிடித்துள்ளது.

Also Read : செவுத்துல அடிச்ச பந்து போல் மாறிய விஜய் டிவி பிரபலம்.. சிவகார்த்திகேயன் போல் மாற முடியாததால் வேதனை

Trending News