புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர்.. 5 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் ரஜினியின் நண்பர்

சமீப காலமாகவே கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? அடுத்த உலக நாயகன் யார்? என சர்ச்சையை கிளப்பும் அளவுக்கு கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர் யார் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால் அந்த பிரபலம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் மட்டுமில்லாமல், அவர் கடந்த 5 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். நாசர் சினிமாவில் மிஸ்டர் ஆல் ரவுண்டர் என பெயர் எடுத்தவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் மனுஷன் அச்சு பிசுறாமல் அடித்து நொறுக்குவார்.

Also Read: நடிப்பு அரக்கன் கமலையே மறக்கும் அளவுக்கு நாசர் நடித்த 5 படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத தேவர் மகன் கிளைமேக்ஸ்

அவரைப் போலவே இப்படியும் நடிக்க முடியுமா என பிரமிக்க வைத்தவர் தற்போது 5 வருடங்களாக வயது மூப்பு காரணமாக படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அலைபாயுதே படத்தில் மாதவனின் தந்தை வரதராஜன் கதாபாத்திரம் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் பிரமீட் நடராஜன்.

இவருக்கு என்று ஒரு தனித்துவமான குரல் கொண்டு, அதன் மூலம் இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்ல ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் வில்லன் கேரக்டரிலும், குணசித்திர கேரக்டரிலும் மாறி மாறி தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி மிரட்டியவர்.

Also Read: நாசர் இயக்கத்தில் வித்தியாசமான 4 படங்கள்.. நல்லா யோசிக்கிறாருப்பா மனுஷன்

அதிலும் பிரண்ட்ஸ், சொல்ல மறந்து கதை என அடுத்தடுத்து பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியவர். சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் பாலச்சந்தரின் கவிதாலயா ஃபிலிம்ஸில் வேலை செய்தார். அதன் மூலம் ரஜினிக்கு இவர் மிக நெருங்கிய நண்பர்.

ரஜினி அரசியலில் ஈடுபட நினைத்தபோது அவருக்கு தோளுக்கு தோளாக நிற்க வேண்டும் என்றும் நினைத்தவர் பிரமீட் நடராஜன். ஆனால் தற்போது வயது மூப்பு காரணமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருக்கிறார். இருந்த போதிலும் இவரை தான் அடுத்த நாசர் என்று கோலிவுட் பெருமைப்படுத்துகிறது.

Also Read: நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட இயக்குனர் சிகரம்.. நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நாசர்.!

Trending News