வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இப்படி செஞ்சா லியோ படத்துக்கு நல்லது இல்ல.. லோகேஷ் நிறுத்தலைன்னா பாபாவிட மோசமான தோல்வி கன்பார்ம்

லோகேஷ், விஜய் கூட்டணியில் தளபதி 67 படம் உருவாகிறது என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல செய்திகள் இணையத்தில் உலாவி வருகிறது. அதுமட்டுமின்றி லியோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் வீடியோவையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதை பார்க்கும் போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி லோகேஷ் ஏதோ செய்ய உள்ளார் என்பது தெரிகிறது.

ஆனால் தினமும் லியோ படத்தை பற்றி ஏதாவது கிளப்பி விட்டு ரசிகர்களுக்கு எரிச்சல் அடைய செய்கிறார்கள். இதில் லோகேஷ் எல்சியு என்று ஹாலிவுட் ரேஞ்சுக்கு இதை பெரிதாக இளைஞர்கள் பேசி வருகிறார்கள். மேலும் ஆளுக்கு ஒரு கதை சொல்லி இதுதான் லியோ படத்தின் கதை என புரளியை கிளப்பி விடுகிறார்கள்.

Also Read : இதுவரை கெஸ்ட் ரோலில் நடிக்காத ஒரே ஹீரோ.. புது ட்ரெண்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்

எல்லா படத்தைப் போல சாதாரணமாக இந்த படத்தை விட்டாலே பெரிய அளவில் வெற்றி பெறும். ஏனென்றால் லோகேஷ் முந்தைய படங்கள் எடுத்து பார்க்கும்போது புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் விஜய்க்கு என்றால் கண்டிப்பாக ஏதாவது சம்பவம் செய்திருப்பார்.

லியோ படத்தைப் பற்றி வரும் வதந்திக்கு லோகேஷ் தான் காரணம் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. அதாவது வேண்டுமென்றே படத்திற்கு ஹைப் உண்டாக்க வேண்டும் என்று உதவி இயக்குனர்களை வைத்து புரளியை கிளப்பி விடுகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

Also Read : ஐம்பதை தாண்டியும் இந்திய அளவில் சாதனை படைக்கும் விஜய், அஜித்.. முதல் முறையாக ஒன்றாக கொண்டாடும் ஃபேன்ஸ்

இதே போல் தான் ரஜினியின் பாபா படம் வெளியாவதற்கு முன்பே நிறைய அப்டேட் வந்து கொண்டிருந்தது. படம் நன்றாக இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் தோல்வியை தழுவியது. இதே போல் இப்போது லியோ படத்திற்கு சீப்பாக அப்டேட் கொடுத்து வருகிறார்கள்.

இது லோகேஷாக இருந்தாலும் அல்லது அவரது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் இதற்கு மேலும் நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பாபா படத்தைப் போல லியோ படமும் மோசமான தோல்வியை சந்திக்கும் என சினிமா விமர்சகர் பிஸ்மி எச்சரித்துள்ளார். ஆனாலும் லியோ அலை இன்னும் இணையத்தில் அதிகமாக வீச தான் செய்யும்.

Also Read : மீண்டும் பற்றி எரியும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. விஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர்

- Advertisement -

Trending News