அஞ்சாதே தயாவை விட மோசமான கேரக்டரில் நடித்த பிரசன்னா.. குவியும் பட வாய்ப்பும் பாராட்டும்

சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் பிரசன்னா. இவர் பைவ் ஸ்டார் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு தன்னுடைய டிராக்கை மாற்றி நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டினார்.

அதிலும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே படத்தில் தீன தயாளன் என்ற கேரக்டரில் பெண் குழந்தைகளை கடத்தும் கொடூரனாக வில்லனாக பிரசன்னா மிரட்டி இருப்பார். இதில் இவருடைய கெட்டப் மற்றும் நடிப்பு இன்றும் பலரையும் பயமுறுத்தும் அளவுக்கு இருக்கும். இந்தப் படத்திற்குப் பிறகு திருட்டுப் பயலே 2 படத்தில் பாலகிருஷ்ணன் என்ற கேரக்டரிலும் பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி இளம் பெண்களை மடக்குவது போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பார்.

ஆனால் தயா, பாலகிருஷ்ணன் போன்ற கேரக்டர்களை விட படுமோசமான கேரக்டரில் தற்போது பிரசன்னா நடித்து பலருடைய பாராட்டுகளை பெற்றிருக்கிறார். படங்களில் மட்டுமே நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும், வெப் சீரிஸ்களில் வில்லனாக நடிக்க கூடாது என திட்ட வட்டமாக இருந்த பிரசன்னாவிற்கு, இரு துருவம் 2 வெப் சீரிஸின் கதை பிடித்து போனதால், அதில் லங்கேஸ்வரன் என்ற கேரக்டரில் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார்.

Also Read: நல்ல அழகு இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. காசு வேண்டாம் வாய்ப்பு தாங்க என கதறிய ஷ்யாம்

2019 ஆம் ஆண்டு இரு துருவம் என்ற வெப் சீரிஸ் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நந்தா, பிக் பாஸ் அபிராமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவம் படத்தின் இரண்டாம் பாகம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி-யில் வெளியானது. கிரைம் திரில்லர் பாணியின் உருவாகியிருக்கும் இந்த படத்தை அருண் பிரகாஷ் இயக்கியிருக்கிறார். படத்தில் நந்தா, பிரசன்னா, அபிராமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இதில் 7 போலீசார் கொலை செய்யப்பட்ட நிலையில், முன் அனுபவம் பெற்ற போலீஸ் அதிகாரியான நந்தா இந்த வழக்கை கையில் எடுக்கிறார். திருக்குறள் தடயத்தை வைத்து இந்தத் தொடர் கொலைகளுக்கு பின்னணியில் இருப்பது உளவியலாளரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான லங்கேஸ்வரன் என்று தெரிய வருகிறது.

தன் முன்னாள் உட்கார்ந்து இருக்கும் நபர்களின் மைண்டை வாசித்து, அவர்களின் நெகட்டிவ் என்ன என்பதை கண்டுபிடித்து, தன்னுடைய கன்ட்ரோலுக்கு கொண்டு வருவது தான் லங்கேஸ்வரனின் கேரக்டர். டிவி ரிமோட்டின் மூலம் டிவி எப்படி ஆப்ரேட் செய்கிறார்களோ அதே போல் இந்தப் படத்தில் லங்கேஸ்வரன் மனிதர்களை தன்னுடைய ஆசைக்கு ஏற்ப ரிமோட் மூலம் ஆப்ரேட் செய்து கொண்டிருக்கிறார்.

Also Read: அஞ்சாதே தயா போல மீண்டும் மிரட்டி உள்ள பிரசன்னா.. இணையத்தில் ட்ரெண்டாகும் இரு துருவம் 2 வீடியோ

நீ தற்கொலை செய்து கொள் என லங்கேஸ்வரன் நினைத்தால், அந்த நபர் உடனே தற்கொலை செய்து கொள்வார். இன்னொருத்தரை நீ போய் கொலை செய்துவிட்டு வா என நினைத்தால், அவர் சென்று கொன்றுவிட்டு வருவார். இப்படி எந்தக் கேள்வியையும் கேட்காமலும் ஒரு ரோபோ போல் மனிதரை மாற்றி அவருடைய மைண்டை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்கும் கதாபாத்திரம் தான் இரு துருவம் 2 படத்தின் லிங்கேஸ்வரன்.

இந்த படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. அவரின் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக பிரசன்னா செய்து இருக்கிறார். மிரட்டலான பேச்சு மற்றும் கெட்டப் மூலம் ஒருத்தரை வில்லனாக ரசிகர்களுக்கு காட்டுவது எளிது. ஆனால் சைலண்ட் கில்லர் ஆக பிரசன்னா தன்னுடைய வசீகர பேச்சினால் பயம் காட்டியுள்ளார். இதில் மூளைச்சலவை செய்து தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கக் கூடிய நபர் ஒருபோதும் தன்னை இன்ஃப்ளுயன்ஸ் செய்து விடக்கூடாது என்பதை இந்த படம் எடுத்துரைத்தது.

Also Read: எதிர்நீச்சல் குணசேகரன் இயக்கிய 2 தரமான ஹிட் படங்கள்.. பிரசன்னாவை நடிகனாய் மாற்றிய தரமான கதை

மேலும் ஒரு சைக்காலஜிஸ்ட் இடம் தங்களுடைய பிரச்சனையை சொல்வது மக்களுக்கு சேஃபான விஷயமா? என்பது இன்று வரை பலருக்கும் தெரியவில்லை. ஆர்டிபிசியல் எமோஷன் மூலம் லங்கேஸ்வரன் சோசியல் மீடியாவில் எப்படி தன்னுடைய பாலோவஸை வசியப்படுத்துகிறார். அவர்களை எல்லாம் லங்கேஸ்வரன் எப்படி நம்ப வைக்கிறார் என்பதை பிரசன்னா இந்த படத்தின் மூலம் தன்னுடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

இந்தப் படத்திற்குப் பிறகு பிரசன்னாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் குவிகிறது. அது மட்டுமல்ல இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கதாநாயகனை விட வில்லனாக லங்கேஸ்வரன் கேரக்டரில் நடித்திருந்த பிரசன்னாவை தான் அதிகம் விரும்பியதாக தங்களது பாராட்டுகளை சோசியல் மீடியாவில் தெரிவிக்கின்றனர்.