ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணசேகரனை அவமானப்படுத்திய ஜான்சி ராணி.. எதிர்நீச்சலில் கரிகாலனை அந்தரத்தில் விட்ட ஆதிரா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிராவால் பெரும் சம்பவமே அரங்கேறியுள்ளது. ஆனால் அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் குணசேகரன் தனது குடும்ப கவுரவம் தான் முக்கியம் என்று இருந்து வருகிறார். மேலும் ஆதிராவின் செயலானது கரிகாலன் உடைய அம்மா ஜான்சி ராணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கரிகாலன் உடன்  பிடிக்காத திருமணத்தை ஏற்பாடு செய்ததால் விபரீத முடிவை எடுத்துள்ள ஆதிராவை குடும்பத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையிலும் கூட  தங்கச்சி என்ற பாசம் துளி கூட இல்லாமல் செத்து ஒழியட்டும் என்று அகங்காரத்தில் பேசி வருகிறார். 

Also Read: லூசு மாதிரி இருந்த எஸ்ஜே சூர்யா.. வாலி உருவான கதையை புட்டு புட்டு வைக்கும் குணசேகரன்

இந்நிலையில் ஆதிரா எடுத்துள்ள திடீர்  முடிவால் கரிகாலன் சுக்கு நூறாக நொறுங்கிப் போய் உள்ளார். மேலும் குணசேகரனிடம்  ஆதிராவிற்கு ஒன்றும் ஆகாதுல்ல என்று கரிகாலன் கேட்டதற்கு நக்கலாக பதில் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் கதிரையும் மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். 

மேலும் மலைபோல் நம்பி இருந்த சம்மந்தியே யாருக்குத் தெரியும் என்பது போன்ற பதிலை அளித்து இருப்பதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஜான்சி ராணி, தனது திட்டம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறார். 

Also Read: எதிர்நீச்சலில் ஆதிராவின் ஜோலியை முடித்த குணசேகரன்.. ஞானத்தை அடுத்து கதிருக்கு வைத்த செக்

அதிலும் குணசேகரனை பார்த்து கரிகாலன் உடைய அம்மா இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்கிறீர்கள் என்பது போல் அவமானப்படுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இவர் கதிரிடம் எல்லோருக்கும் நான் கிள்ளுக்கீரையாக தெரிகிறேன் போல என்று புலம்பி வருகிறார்.

இப்படியாக போற போக்கை பார்த்தால் ஒரு கட்டத்திற்கு மேல் ஞானசேகரனை போல, கதிரும் அம்போன்னு விட்டுவிட்டு செல்ல போகிறார் என்று தோன்றுகிறது. அதிலும் கரிகாலனுடன் தான் ஆதிராவிற்கு திருமணம் என்று விடாப்பிடியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜான்சி ராணி மூலம் இவருக்கு பெரும் சம்பவம் நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Also Read: பிரபல சேனலை ஒரேடியாக ஓரம் கட்டிய சன் டிவி.. டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 10 சீரியல்கள்

- Advertisement -

Trending News