ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கேஜிஎஃப்யை அப்படியே அட்டை காப்பி அடிச்சு வச்ச படக்குழு.. இதுல செகண்ட் பார்ட் வேறயா.?

கன்னட மொழியில் வெளியான கே ஜி எஃப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவானது. விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக வெளியான கேஜிஎஃப் 2 வசூலை வாரி குவித்தது.

மேலும் கே ஜி எஃப் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் யாஷ் கவர்ந்தார். இந்நிலையில் கே ஜி எஃப் படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த சூழலில் சமீபத்தில் கன்னட மொழியில் வெளியான படம் ஒன்று அப்படியே கே ஜி எஃப் படத்தை அட்டை காப்பி அடித்துள்ளனர்.

Also Read : உலகளவில் அதிக வசூல் செய்த 4 இந்திய படங்கள்.. அசைக்க முடியாத கேஜிஎஃப்-பை தொட போகும் பதான்

ஆர் சந்துரு இயக்கத்தில் உபேந்திரா, ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் கப்ஜா. மேலும் இப்படத்தில் கிச்சா சுதீப் மற்றும் சிவராஜ் குமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். கே ஜி எஃப் மற்றும் காந்தாரா படத்தை போல் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் அதற்கு அப்படியே எதிர்மறையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது. படத்தில் ஆறு, ஏழு வில்லன்கள் இருந்தாலும் ஒன்றுகூட ரசிகர்கள் மனதில் இடம்பெறவில்லை. இப்படத்தில் சுவாரஸ்யம் மிகக் குறைவாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read : கே ஜி எஃப் நடிகரை வளைத்து போட்ட கார்த்தி பட இயக்குனர்.. வாயைப் பிளக்கும் கோலிவுட் பிரபலங்கள்.!

மேலும் பெரும்பாலானோர் கே ஜி எஃப் படத்தோட அட்டை காபி தான் கப்ஜா படம் என கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். கதை, இசை, கிளைமாக்ஸ், டயலாக் என அனைத்துமே கே ஜி எஃப் படம் காப்பி அடித்து உள்ளனர். அப்படி இருந்தும் படத்தில் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

இதில் கப்ஜா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது. அதில் என்ன சம்பவம் பண்ண போகிறார்களோ என்ற பயத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் கன்னட மொழி படங்கள் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் கப்ஜா படம் அதை பொய்யாக்கி உள்ளது.

Also Read : காசுக்காக நம்ம ஹீரோக்களை அவமானப்படுத்தும் இயக்குனர்கள்.. கேஜிஎஃப், காந்தாராவை பார்த்து கத்துக்கோங்க

- Advertisement -

Trending News