ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆத்தி! அவரா இவரு.. 22 வருஷமா பீதியில் உறைய வைத்த பொட்டு அம்மன் வில்லன்

பொதுவாக சினிமாவில் நடிக்கும் வில்லன் நடிகர்களை பார்த்தால் பலருக்கும் கோபம் தான் வரும். இப்படி எல்லாமா இருப்பாங்க என வில்லனை பார்த்து சாபம் விடும் தாய்க்குலங்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த வில்லனை பார்த்தால் மட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடுநடுங்கி போவார்கள்.

அந்த அளவுக்கு உருவத்திலும், நடிப்பிலும் கொடூரத்தனத்தை காட்டிய ஒருவரும் இருக்கிறார். அவர்தான் பொட்டு அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அலறவிட்ட சுரேஷ் கிருஷ்ணா. மலையாளத்தில் மிகப்பெரும் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Also read: ரஜினி எல்லாம் ஒரு சிறந்த நடிகரா?. விருது கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசிய அமீர்

சில தமிழ் சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் பொட்டு அம்மன் திரைப்படத்தில் பிரம்மாண்ட உருவத்துடன் கர்ண கொடூரமான வில்லத்தனத்தை காட்டியிருப்பார். அதிலும் அந்த கருப்பு உடையில் அவர் நடந்து வருவதும், அரக்கன் போல் இருக்கும் பற்களை காட்டி அட்டகாசமாக சிரிப்பதும் என அப்போதைய குழந்தைகளை தூங்கவிடாமல் செய்த பெருமை இவருக்கு உண்டு.

கடந்த 2000ம் ஆண்டு ரோஜா, சுவலட்சுமி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருடைய உண்மையான முகம் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. அந்த வகையில் அவரா இவர் என்று கேட்கும் அளவுக்கு சுரேஷ் கிருஷ்ணா இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

Also read: காமெடி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. சந்தானத்தின் காதலியாக மாஸ் காட்டிய ஜாங்கிரி

அது மட்டுமல்லாமல் தற்போது இவருடைய போட்டோவும் மீடியாக்களில் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். இப்படி ஹீரோ லுக்கில் இருக்கும் இவரையா இப்படி கொடூரமாக காட்டி இருந்தார்கள் எனவும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

pottu-amman-suresh-krishna
pottu-amman-suresh-krishna

மேலும் 22 வருடங்களாக இவரைப் பார்த்த பீதியில் உறைந்து போனோம் என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். இப்படி சாக்லேட் பாய் லுக்கில் இருக்கும் இவர் இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவின் சிறந்த கொடூர வில்லனாக இருந்து வருகிறார். அந்த வகையில் இப்போதைய முரட்டு வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இவர் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: முத்தின பின் ஜொலித்த 5 முரட்டு ஹீரோக்கள்.. பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி கண்ட விஜய் சேதுபதி 

- Advertisement -

Trending News